பக்கம்:கடல் முத்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கடல் முத்து அன்பு கசிந்த கண்கள்: அருள் நிறைந்த உதடுகள்: தேஜஸ் மண்டிய முகவிலாசம்: கொண்டை சுற்றப்பட்டிருந்த சுருள் அஜ்ல படிந்த தலை முடியில் நட்சத்திரப் பூக்கள் மின்னின; இடது பக்கத்தில் தந்தச் சீப்பு இருந்தது. வில்க் அங்கி; அது இபார் இப் பூசித்த யெளவனத்திற்குப் பாதுகாவல் போலும்! f • சொக்கவிங்கம் நேத்திரங்களே மூடினன் இதழ்கள் வழி கேட்டன. மாட்டிஞ்சி' என்று தன்னுள் அவன் முணு முணுத் துக்கொண்டான். கண்ணிர் முட்டி மோதியது. உருப்பெற்ற அந்தப் பெயரிலே பர்மியர் நாடு உருக் காட்டியது: அன்பின் கதை உருக்கொண்டது. с அன்பு சோதனை வடிவானது அல்லவா? ஆளுல், இதே அன்புச் சோதனைக்கு இலக்கான் நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இருந்தது கிடையாதுதானே? 3 . மேல் பர்மாவின் நாட்டு வளப்பத்துக்குச் சிறப்புப் பாயிரம் அளித்து, நீர்வளம் காட்டிய பெருமை ஐராவதி நதிக்கு உடைமையாகும். 'தப்பிப்பீன் என்னும் ஊர் நதிக்கரையில் அமைந்தது. நீர்ச் செழிப்புக்கு ஏகபோக வாரிசு மாதிரி விளங்கினுள் மாட்டிஞ்சி. அவளுடைய தகப்பன் கொல்லாப்போ மகா முரடன். அவனிடம் குதிரைவண்டி ஒன்று இருந்தது. இரங்கூன் முகத்துவாரத் தில் திம்போனஸ்ன்-கப்பல் பிடிப்பு நடந்து முடிந்து ஐந்தாறு நாட்கள்வரை, மீஞ்சான் போன்ற பகுதிகளிலிருந்து திரளும் பிரயாணிகள் அவனுக்குக் கை நிறையைக் கொடுப் பார்கள். ஆனல் அவனிடம் ஒரு கெட்ட குணம் குடிகொண். டிருந்தது. கல்லாக்களே-இந்தியர்களே அவன் வெறுத்தான். ஒருநாள். ; , , .. சொக்கலிங்கம் தன்னுடைய நிர்வாகத்திலிருந்து மரக் கடைக் கல்லாவில் கணக்கப் பிள்ளையை அமர்த்திவிட்டு, கடையை விட்டு வெளியே வ்ந்தான். கிஸ்தி வசூல் செய்ய வேண்டிய இடங்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய சிட்டைப் புத்தகம் அவனுட்ைய சேப்பி'யில் இருந்தது. அவன் அணிந்திருந்த சைட்யூ லாங் தெருவில் ஊர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/125&oldid=764971" இலிருந்து மீள்விக்கப்பட்டது