பக்கம்:கடல் முத்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IÍ 3ß கடல் முத்து முடிக்கத் திட்டமிட்ட அவன், முதன் முதலில் மாட்டிஞ்சி யிடம் பயணம் சொல்லிக்கொள்ளச் சென்ருன். அவள் தந்தையை அண்டி, நிரம்பப் பொருள் கொடுத்தால், அது ஒரு வகையில் மாட்டிஞ்சிக்கும் உதவுமே என்பது அவன் கருத்து. மரப்பெட்டி வீட்டில் அடியெடுத்து வைத்ததும், புத்தரீன் காலடியில் மாட்டீஞ்சியின் தந்தையின் படத்தைக் கண்டதும், அவனுக்கு மலேப்பு ஏற்பட்டது. தான் அனதை பாகிவிட்டதாகக் கதறினுள் அவள். நினைவுகளின் பிறப்புக்கு நேரம் காலம் இல்லை! வத்சலை, என் தெய்வம் மாட்டிஞ்சி எனக்கு வாழ்த்து அனுப்பாமல் இருக்கவே மாட்டாளே? . . .அவளிடமிருந்து எதுவும் வராததால், ஒருவேளை அவள் உயிருக்கு. . . : அவன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னதாக, அம்மான், என்னே, என்னை மன்னிச்சிருங்க” என்னும் அலறல் ஒலி அதிர்ந்தது. இத்தப் படத்தைக் கண்டதும், தப்பா தினைச்சுக்கிட்டுத்தான் இந்தப் பர்மாக் கடுதாசியையும் ஒளிச்சுப்பிட்டேன். எனக்குத் தாவி பாக்கியம் நிலைக்கச் செய்ஞ்ச தெய்வத்தைத் தப்பா நினைச்சது எவ்வளவு பெரிய பாவம்' என்று கூறிய வண்ணம், கையிலிருந்த படத்துடன் கிழிக்கப்பட்ட உறைக் கடிதம் ஒன்றையும் நீட்டினுள் வத்சல. . பர்மிய மொழிக் கடிதத்தின் பொருளை சொக்கலிங்கம் சொன்ஞன். * ' உயிருக்கு நேரான அண்ணு! நலம். உங்கள் அ ைழ ப்பு பெற்றேன். உங்கள் தாம்பத்திய நல்வாழ்வுக்காக மகான் புத்தபிரானின் திருப் பாதங்களைத் தொழுது பிரார்த்தித்தேன். என் அண்ணியைக் காண, திருமணப் பரிசுகளோடு அடுத்த மாதம் கப்பலேறி வருகிறேன். என் எதிர்காலக் கணவரும் உடன் வருவார். . - மாட்டீஞ்சி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/129&oldid=764975" இலிருந்து மீள்விக்கப்பட்டது