பக்கம்:கடல் முத்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瑟8 கடல் முத்து தத்தளிச்ச முத்தையனே நான் கஷ்டப்பட்டுத் துாக்கி எம் படகிலே கொண்டாந்தேன். எதுக்கும் தலை எழுத்துன்னு ஒன்னு இருக்கில்லே. நான் சொல்றதைக் கேளு, இதிலேருந்து புரியலையா நீ எனக்கேதான் பூமியிலே பொறந்தவளுன்னு..." என்று சொல்லி மெ ல் ல நெருங்கினன் மாரி. அவன் பார்வையில் வெற்றியின் மிடுக்கு! இமைப் பொழுதிற்குள் எவ்வளவு கோர சம்பவம் நிகழ்ந்துவிட்டது? பித்துப் பிடித்தவள் போலான குணவதி மற்றும் ஓர் தவணை முத்தையனைப் பார்த்தாள். பேசவும் திராணியிழந்து விழுந்து கிடந்த முத்தையனேக் காண அவளுக்கு அழுகை பீறிட்டது. கடைசியில் எல்லாம் கனவு தான எ ன் .ெ ற ண் ணி ய அவளுக்கு ஒர் நினைவு மின் வெட்டிற்று. மாரி முத்தையன் மேலே உனக்கிருந்த வஞ்சம் தீர்ந்து போச்சில்லையா? ஆனதாலே ஒம்மேலே எனக்குள்ள பழியைத் தீர்த்துவிட வேண்டியதுதான் பாக்கி. பாவிப்பயல்...' என்று வெறிபிடித்தவள்போலக் கர்ஜித்த குணவதி ஒரே மூச்சில் மாரியைப் பிடித்துத் தள்ளினுள். மாரியின் தலே கரையிலுள்ள படிக்கல்லில் படாரென்று மோதியது. அவ் வளவுதான். ரத்தம் பீறிட்டது. பிறகு முத்தையனைத் தொட்டுப் பார்த்தாள். உடல் ஜில்லிட்டிருந்தது. அதே சமயம் அமைதியுடன் ஒடிய ஆற்றில் சரண் புகுந்தாள் குணவதி. - "குனவதி குணவதி' தொடர்ந்து கேட்ட குரலேக் கண்டு விழித்தெழுந்தாள், கனவு கண்டு விழிப்பவள் போல, "சந்தேகமில்லை. நிச்சயமாக மச்சானேதான்-இப் படிக் குணவதி தன்னுள் முனகினள். சற்று முன் கண்டது பூராவும் வெறும் கனவு என்பது அப்பொழுதுதான் அவளுக் குப் பிடிபட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/45&oldid=765017" இலிருந்து மீள்விக்கப்பட்டது