பக்கம்:கடல் முத்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் 45 நைந்துபோன பாய்மீது முடங்கிக் கிடந்தாள் செல்லம்மா. தலைமாட்டில் அகல் விளக்கு மங்கலாக எரிந்தது. இரண்டு நாளாகக் காய்ச்சலில் கஷ்டப்பட்ட குழந்தையின் முகம் வாடிவிட்டது. எண்ணெய் படாமல் சிக்கல் பாய்ந்திருந்த கேசத்தை மெல்லக் கைவிரல்களால் கோதியவண்ணம் தன் மகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரம். செல்லம்மாவுக்குக் கிட்டத்தட்ட எட்டு வயதிருக்கும். ஆனல் அந்த எட்டு வருஷங்களில் முழுசாக ஏழு வருஷங்கள் தாம் தாயின் பராமரிப்பில் வளர அதன் தலையில் லவிதம்” இட்டிருந்ததுபோலும். அப்புறம் தாயற்ற மகளுக்குத் தந்தையின் பொறுப்புடன் தாயின் ஸ்தானத்தையும் சேர்த்து நிர்வகிக்க வேண்டியவளுன்ை அவன். காய்ச்சி வைத்திருந்த கஞ்சியைக் குவளையில் சீராக ஊற்றி மகளிடம் நீட்டினன். மடமட'வென்று குடித்தாள் செல்லம்மா. 'இன்னும் கொஞ்சம்-?" ஊஹகும்! வேணும்!" தலையணையை இசைவாக வைத்துப் படுக்க வைத்தான் சிங்காரம். அப்பா!' துரங்கலையா கண்ணு?" "அப்பா, பார்த்தியா மறந்து பூட்டேன். சாயந்திரமா மேஸ்திரி ஐயா வந்துட்டுப் போளுரு பணத்துக்கு. - சிங்காரத்தின் மன அமைதியைப் பறித்துச் சென்றது, செல்லம்மா கூறிய சேதி. அவன் கலங்கினன். கடன்பட்ட நெஞ்சமாயிற்றே மனைவியின் பிரசவத்திற்கென ஐம்பது ரூபாய் கடன் வாங்கியிருந்தான் மேஸ்திரியிடத்தில், பிள்ளை யும் தாயும் வேருகப் புனர்ஜன்மமெடுத்துச் சுகமுடன் பிழ்ைக்கவேண்டுமேயென்று. டாக்டர் பீஸிற்குக் கரைந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/54&oldid=765027" இலிருந்து மீள்விக்கப்பட்டது