பக்கம்:கடல் முத்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கடல் முத்து iெனவே பட்டது. மேலும் அப்போதுதான் கண்கொத்திப் பறவைபோல் தன்னைப்பற்றிக் கண்காணித்து வரும் சமூகத் தின் சூழ்நிலையிலிருந்து தப்பமுடியும் என்பதையும் திர உணரலாளுள். பின் சம்மதமும் கொடுத்தாள். அடுத்த படப் பிடிப்பு முடிந்ததும் தம்பதிகளாக எண்ணினர். அன்ன பூமி சம்பாதித்த புகழின் வெற்றிச் சுவட்டி லேயே அடுத்தபடியாகத் தயாரிக்கப்போகும் மாயா மோகினி படத்தின் கதாநாயகனக நடிக்கத் தேர்ந்தெடுக் கப்பட்டிருந்த ஜோதிநாத் என்னும் புது நடிகரை மாயா விற்கு அன்று அறிமுகம் செய்துவைப்பதாக டைரக்டர் வாக்களித்திருந்தார். சாயங்காலம் ஸ்டுடியோவிற்குப் புறப் படஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்த அவள் பெண் மன்தில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய்ந்தன. தன்னுடன் முக்கிய பாகமேற்று நடிக்கவேண்டிய அப்புது மனிதர் எவ்விதம் இருப்பார், பழகும் விதத்தில் எத்தகைய மனப் டான்மையுடையவரோ என்பது போன்ற நினைவுச் சுழற்சி யில் அயற்சியுற்ருள். ஏனென்ருல், முதல் படத்தில் முக்கிய பாகத்தை டைரக்டரே ஏற்றுக்கொண்டார். நெடுநாளாகப் பழகிப் போனதால் அவருடன் ஒட்டி நடிப்பதில் லவவேசமும் அதிர்ச்சியோ அல்லது திகிலோ ஏற்படவில்லை மாயாவுக்கு. ஆளுல் ஜோதிநாத்...? இவ்விதம் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் மிகவும் ரகசியம்' என்று டேஞ்சர் சிக்னல் காட்டி நின்ற தபாலை நீட்டினன் வேலைக்காரப் பையன். பதட்டத்துடன் அதைப் பிரித்துப் படித்தாள். - 'அம்மணி, - முன்னும் பின்னும் தெரிந்திராத இடத்திலிருந்து இக் கடிதம் வருவது கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம்: அதிசயப்படலாம். ஆனல் பாலைநிலத்தில் காயும் நிலவு போன்று என் வாழ்நாட்கள் வீணுகிவரும் துரதிருஷ்டத் திற்கு விடிவு ஏற்படத் தங்களது கருனைதான் வேண்டும், வேடிக்கையாகத் தோன்றலாம். வெளியிட்டுக் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/63&oldid=765037" இலிருந்து மீள்விக்கப்பட்டது