பக்கம்:கடல் முத்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 2 கடல் முத்து லுக்குப்புறம்பான சோகமிருந்தது; சஞ்சலமிருந்தது; ஆர்வ மிருந்தது; ஆதுரமிருந்தது! - •. குமாரசாமி காளியை நோக்கினன். அவன் செயலிழந்த பாவையாக நின்றிருந்தான். விழிக்குழியில் புதைந்து கிடந்த கண்ணின் கருவிழிகள் அங்குமிங்கும் யாரையோ தேடியலைந்தன. அவன் தங்கையையா? சகோதரியை மீண் டும் பார்க்கலாமா?’ என்ற ஆசைக் கனவில் மிதந்த அவன் இமைப்பொழுது அதிர்ச்சியடைந்தான். அதே நொடியில் ‘இனி எப்படி, எங்கே அவளைக் காண இயலும்! என்ற நிலை ஏற்படவே மலர்ச்சி பெற்ற அவன் வாட்டமுற்ருன்; வாடிப் போனன். - சாலை எல்லையை மிதிக்கும் வரை இருவரும் மோன நிலையில் வழிநடந்தனர். ஊரை அடைந்தவுடன் குமார சாமி சில்லரையை எண்ணி எட்டு அணு காளிக்குக் கொடுத் தான். காளி சிரித்தான்; பலமாகச் சிரித்துக் கொட்டினுன், ஊழிக் கூத்தில் பிரமன் உ தி ர் த் த பேய்ச் சிரிப்புக் கணக்கில்-! அவன் சிரிப்பில் இதய அந்தரங்க எண்ணங்கள் பூராவும் அலைபாய்ந்து மேல் பூச்சாகி எதிரொலிப்பது போன்று குமாரசாமி நினைத்துக்கொண்டான். ' பாவம் பைத்தியம் போல." குமாரசாமி இரக்கங் காட்டினன். காளி அப்படியென் ல் பைத்தியமா? யார் சொன்னர்கள்? ஐயா, காசு பணத்துக்கு என்னங்க. உங்க மாதிரி நல்ல். மனுசங்கதான் எனக்குப் பெரிசு. எனக்கு என் தங் கச்சிப் பொண்ணு கிடைக்குங்களா?' என்று கூறி, அவன் தங்கியுள்ள வீட்டைக் கேட்டுக்கொண்டு காளி விடை பெற் றுக்கொண்டான். -

  • .

அடுத்த நாள். - மத்தியானம் கடைத் தெருப் பக்கம் குமாரசாமி சென் றிருந்தான்; சடங்கு விசேஷம் முடிந்ததால் ஊருக்குப் புறப் படச் சாமான்கள் வாங்கிவரப் போயிருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/71&oldid=765046" இலிருந்து மீள்விக்கப்பட்டது