பக்கம்:கடல் முத்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையலும் தையலும் ፲፰ "அண்ணுச்சி, நீங்க பிழைச்சுட்டிங்களா? அந்தக் குட்டிமேலே கொண்ட ஆசையிலே உங்க உயிருக்கு உலை வைக்கக் கஞ்சியிலே விஷம் கலந்துட்டேன். அண்ணுச்சி! என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னியுங்க!” மாடன் தேம்பினன். முருகுவுக்குக் கொஞ்சம் தெம்பு ஊறியது. தம்பியை அணேத்துக்கொண்டு, தம்பி, எல்லாத் துக்கும் மேலே கடவுள் இருக்காரல்லவா? நீ விஷமின்னு எண்ணிக் கலந்தது சும்மா மயக்க மருந்துபோல, நம்ப நல்ல காலம். கடந்தது கண்ணிரோடு தொலையட்டும். அந்தப் பொண்ணைக் குறை சொல்லாதே. அது என்ன செய்யும்? விடிஞ்சதுமே வஞ்சியைக் கண்ணுலம் செஞ்சிக்கிடப் பரிசம் போட்டுடுவோமா? அதை நீதான் கேளுவேன்..." என்ருன் (Լբ(565. குடிசையின் மூலையிலிருந்த அகல்விளக்கின் திரியில் சுடர் ஏறியது; ஒளி மங்கியது. சற்றுக் கழித்து அச்சுடர் தெறித்துப் பூமியில் விழுந்தது. மறுபடியும் முன்போல அழகாக அகல் வெளிச்சம் எங்கும் பரவ ஆரம்பித்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/82&oldid=765058" இலிருந்து மீள்விக்கப்பட்டது