பக்கம்:கடல் முத்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

š多 கடல் மூத்து தேதி வைத்திருக்கும் சேதியைத் தங்கச்சியிடம் கூறத் துடித் தான் சின்னையா. அதே சமயத்தில், அண்ணுச்சி அவருஎம் புருசன் செத்துப் போயிட்டாரு. யாரோ பாவிப் பய லுங்க அவரை அடிச்சுக் கொன்னுட்டாங்க. அங்கே போயிட்டுத்தான் இப்ப வாறேன். மச்சான் சாவுக்கப்புறம் இனிமேப் புதுசா என்னலே வாழ்க்கை தொவக்க ஏலாது. அவரு கை தொட்டுக் கட்டின தாலியைத் தவிர இனி வேறே யாரும் என் கழுத்திலே மஞ்சள் கயிறு முடியச் சம்மதிக்கமாட்டேன். எம்மேலே ஆணே இது. . .' என் ருள் வள்ளி. அவள் பெண்; அவள் அவன் மனைவி! சின்னையா ஆணியால் அறையப்பட்டவனுக நின்ருன். வள்ளியின் அழுகை வளர்ந்தது. தங்கச்சி, என்னை மன்னிப்பியா? உன்னை இப்படி அநியாயமா மாரி தள்ளி வச்சிட்டானே என்கிற ஆத்திரத் திலே, அவன் மேலே பழில்ாங்க நான் அவனே அடிச்சுப் போட ஆட்களை ஏவிப்போட்டேன். ஆன இப்படி அவன் உசிருக்கு ஆபத்து வருமின்னு துளியும் தெரியாது. ஐயோ, தங்கச்சி. . . “ என்று கூறிய தன் தமையனின் வார்த்தைகளைக் கேட்ட வள்ளி அப்படியே மூர்ச்சித்து விழுந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/91&oldid=765068" இலிருந்து மீள்விக்கப்பட்டது