பக்கம்:கடல் முத்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛4 கடல் மூத்து றேன்...! மீண்டும் சிரித்தான்; வாய்விட்டுச் சிரித்தான் அவன்! சுடலையாடியின் கழுத்தில் இழைந்து கிடக்கின்ற ராஜ நாகமென அவன் கழுத்திலே உருமாலே சுற்றிக் கிடந்த அந்தத் துவாலை கழன்றும், சுழன்றும் அவனது காலடியிலே வீழ்ந்தது. தலை குனிந்தவனின் திருஷ்டியில் திருஷ்டி கழித்து சிவனே'யென்று கிடந்த கிழிசல் துவாலேயைக் கையில் எடுத் தான்: ஐயையோ... ! என்று ஓலமிடலானன். ஆத் தாளே, மூத்தவளே! நான் பாவியாகிப் போயிட்டேனே?" என்று நெஞ்சு வெடித்துச் சிதறக் கூவினன்; மீண்டும் அந்தத் துவாலையை நோக்கினன் சக்திவேல். அந்தப் பாதிக் கிழிசல் விதியாகவே சிரிக்கிறது; சிரித்துக் கொண்டேயிருக்கிறது...! அலறிக் கதறிக்கொண்டே ராக்காச்சியம்மனின் சந்நி தானத்திலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் சக்திவேல். இடுக்கிப் புழுவாகத் துடித்தான்; துடியாய்த் துடித்தான். "ரத்தத்திமிரிலேயும், மோக வெறியிலேயும் நான் செஞ்சுப் பிட்ட அநியாயப் பாவத்துக்கு ஒன்னலே தக்க தண்டனை கொடுத்துப்புட ஏலாது ஆத்தாளே ராக்காச்சியோ...! அதாலேதான் நான் செஞ்ச அந்தப் பாவமான, பயங்கர மான, ஈனத்தனமான பழிபாவத்துக்கு உ ண் டா ன தண்டனையை எனக்கு நானே இந்தாலே கொடுத்துக்கிடப் போறேனுக்கும்...: ஆமாடி ஆத்தாளே! நடுங்கும் குர லுடன் கத்திக்கொண்டு பாதி கிழிச்சல் துணியைப் பற்றிக் கொண்டே இருளைக் கிழித்துச் சாலையைக் குறிவைத்து ஒடின்ை இளவட்டம். பெருக்கெடுத்து ஓடின கண்ணிரில் அவனுடைய கன்னங்களின் தழும்புகள் எரிந்தன! சாலை வந்தது. . ஆவணத்தாங்கோட்டைச் சாலை. கிட்டத்தில் ஒட்டி நின்ற ஆலமரத்தை அமைதி காணத் தவித்த வெள்ளைத்தனமான நிவாரணப் புத்தியோடு ஏற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/93&oldid=765070" இலிருந்து மீள்விக்கப்பட்டது