பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

taskbar properties

1431

. tc


மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக் கொண்டு தேவை யானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start) பொத்தானும், தேதி, நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு.

taskbar properties : பணிப்பட்டைப் பண்புகள்.

taskbar options : பணிப்பட்டை விருப்பத் தேர்வுகள்.

task button : பணிப்பொத்தான் : விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப் பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள்மீது சொடுக்கி, தேவையான பயன்பாட்டில் பணிபுரியலாம்.

task despatcher : பணிப் பொறுப்பு செலுத்தி.

task dispatcher : பணிச்செலுத்தி.

task list : பணிக்கடமைப் பட்டியல் : ஒருவர் இயக்குகின்ற அனைத்து பயன்பாடுகளும் காட்டி, அவைகளுக்கிடையில் பிரித்தளிக்க உதவும் ஒரு "விண்டோ" பணிக்கடமை பணிப்பட்டியலைத் திறக்க வேண்டுமென்றால் "switch to"என்பதை கட்டுப்பாட்டுப் பட்டியலிலிருந்து தேர்வுசெய்யவேண்டும்.

task management : பணி மேலாண்மை : ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட நிரல்தொடர்களை (பணிகளை) ஓட்டுவதைக் கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப்பின் பகுதி.

task panel : பணிப்பொறுப்புச் சட்டம்;பணிச் சட்டம்.

task queue : பணி வரிசை.

task swapping : பணிப்பொறுப்பு இடமாற்று : இரண்டு பயன்பாடு களுக்கிடையில் பிரித்தளித்தல். நடப்பிலுள்ள ஒடும் நிரல்தொடரில் இருந்து வட்டுக்கோ அல்லது பிற அதிவேக சேமிப்பக சாதனத்திற்கோ (துணை நினைவகம் ஈ. எம். எஸ் போன்றவை) மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறொரு நிரல் தொடரை ஏற்றுதல்.

task switching : பணி பிரித்தளித்தல் : தீவிரமான பயன்பாடுகளுக்கு இடையே பிரித்தளித்தல்.

. tc : . டீசி : ஒர் இணைய தள முகவரி துர்க்ஸ்-கைக்கோஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக்