உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

group mark

670

guest


group mark : குழு அடையாளம் : ஒரு சொல்லின் தொடக்கம் அல்லது முடிவு அல்லது விவர அலகு ஆகியவற்றைக்காட்டும் காட்டி.

group printing : குழு அச்சிடல் : தொகுதி அச்சிடல் : ஒரு கணக்கிடும் எந்திரத்தின் வழியாகச் செல்லும் ஒவ்வொரு தொகுதியின் முதல் அட்டையில் மட்டும் தரவுவை அச்சிடும் செயல்முறை.

groupware : குழுமச் சாதனம் : பணிக் குழுமங்களின் உறுப்பினர்களின் பணி நடவடிக்கை களுக்கு ஆதரவாக இருக்கிற மென்பொருள் தொகுதிப் பொறியமைவு. இக்குழுமங்களின் பணிநிலையங்கள், ஓர் உள்முகப்பகுதி இணைவனத்தினால் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும்.

grovel : ஊர்தல்;நகர்தல்; (நத்தை போல் நகர்தல்) : 1. ஒரு தேடலை அல்லது ஒரு பணியை எவ்வித முன்னேற்றமுமின்றி செய்து கொண்டிரு த்தல். ஒரு கோப்பிலிருந்து தரவு பெற எழுதப்பட்ட சில நிரல்கள் வெளியீட்டைத் தருமுன்பு அக்கோப்பு முழுமையும் மெதுவாக ஊர்ந்துபார்வையிடுவதுண் டு. சில வேளைகளில், ஒரு நிரலர் ஒரு குறிப்பிட்ட கட்டளை பற்றி அறிய ஆவணங்களில் பக்கம் பக்கமாக ஊர்ந்து தகவலைத் தேடுவதுண்டு. அல்லது நிரலில் ஏற்பட்டுள்ள பிழையைக் கண் டறிய நிரலின் வரிகளுக்கிடையே நகர்தல் உண்டு. 2. ஒரு செய்திக்குழுவில் சில அனுகூலம் கருதி முன் வைக்கப்படும் கோரிக்கை.

. gt : ஜி. டீ : ஓர் இணையதள முகவரி குவாதிமாலா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

gu : ஜியு : ஓர் இணையதள முகவரி குவாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

guarantee : உறுதிப்பாடு : உத்திர வாதம்.

guard signal : காப்புச் சைகை : ஓர் இலக்கமாக்கியிலிருந்து வெளிப்பாட்டுச் சைகைகளைப் படிப்பதற்கான அனுமதியைச் சுட்டிக்காட்டுகிற ஒரு சைகை.

guest : விருந்தினர் : ஒரு பிணையத்தில் நுழைசொல் இல்லாமல் நுழைந்துகொள்ளும் உரிமையுடைய பயனாளரின் பெயரைப் பொதுவாக இவ்வாறு குறிப்பிடுவர். செய்தி அறிக்கை சேவைகள் மற்றும் இணையத்தில் பல்வேறு சேவைகளை