பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

combinatorics

101

command interpreter


combinatorics : இணைப்பியல் : நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசைமாற்ற வகைகளையும் கொண்டது. பெரிய குழுவிலிருந்து எடுத்த உறுப்புகளைத் தொகுத்தல், குழுவில் உறுப்புகள் இருந்துவந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் எடுத்துத் தொகுக்க வேண்டும். சான்றாக, 4 பொருள்கள் கொண்ட குழுவிலிருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு உறுப்புகள் எடுத்து ஆறு இணைப்பு வகைகள் உண்டாக்கு தல். ABCD என்னும் பொருள்களில் இரண்டை எடுத்து AB, AC, AD, BC, BD, CD என ஆறு உண்டாக்குதல். உறுப்புகளின் வரிசையை அப்படியே கொண்டு பெரியதிலிருந்து உறுப்பு கள் எடுத்துத் தொகுப்பது வரிசை மாற்ற வகையாகும். உதாரணமாக நான்கு பொருட் தொகுதியிலிருந்து இரண்டு பொருள்கள் எடுத்து வரி சை மாற்ற வகை செய்தலைக் குறிப் பிடலாம். முதல் தெரிந்தெடுப்பான Aயில் நான்கிலிருந்து எடுக்க வேண்டி யிருக்கும். அடுத்த B தெரிந்தெடுப்பு மீத மூன்றிலிருந்து எடுப்பதாகும். மொத்தத்தில் 12 வரிசைமாற்ற வகை கள் உண்டாக்கலாம். அதாவது AB, AC, AD, BA, BC, BD, CA, CB, CD, DA, DB, DC.

command button : கட்டளைப் பொத்தான் : அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்குவிசை. வரைகலை பயனாளர் இடைமுகத் தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி அப்போதுதான் தெரிந்தெடுத்த கோப்பைத் திறப்பதுபோன்ற செயல்களைச் கணினியை செய்ய வைக்கலாம்.

command.com : கமாண்ட்காம் : எம்எஸ் டாஸ் இயக்க முறையின் தலையாய கோப்பு. அகக்கட்டளைகளை இதுவே நிறைவேற்றி வைக்கிறது.

command driven : கட்டளை முடுக்கி; குறியீட்டுச் சொற்களாக அல்லது எழுத்துகளாகக் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுதல். இம்முறையை பயனாளர் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

command driven system : கட்டளையால் இயங்கும் முறைமை : கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து நுழைந்த ஆணையைக் கொண்டு பயனாளர் செயற்பாடுகளைத் தொடங்குகிற ஓர் அமைப்பு.

command interpreter : கட்டளை பெயர்ப்பி; ஆணை பெயர்ப்பி; கட்டளை வரி மாற்றி : சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன் பாட்டுத் தொகுப்புகளை இயக்கவும், பயன்பாடு தொடர்பான தகவல்கள் செல்வதை வழிப்படுத்தவும் செய் கிறது. ஒ.எஸ்/2 மற்றும் எம்எஸ்டாஸில் கட்டளை பெயர்ப்பி, கோப்புகளை நகர்த்தவும், படி எடுக்கவும், நீக்கவும், கோப்பகத் தகவல்களைக் காட்டவும் செய்கிறது.