உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamic font

161

.dz


நினைவகப் பகுதி கையிருப்பில் உள்ளது என்ற அடிப்படையில் இடைமாற்று நினைவகக் கொள்ளளவு தீர்மானிக்கப்படும்.


dynamic font: இயங்குநிலை எழுத்துரு.


dynamic keys : இயங்குநிலைத் திறவிகள், நிகழ்நேர மறைக்குறிகள் : பிணையம் அல்லது இணையத்தில் தகவல் மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப் படுவதுண்டு. மறுமுனையில் மறை விலக்கம் செய்யப்பட்டு மூலத்தகவல் பெறப்படும். இவ்வாறு மறையாக்கம், மறைவிலக்கம் செய்ய திறவிகள் (Keys) பயன்படுகின்றன. ஒரு பயனாளரின் தனித்திறவி (Private key) மூலம் மறையாக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்குரிய பொதுத்திறவி மூலம் மறைவிலக்கம் செய்யப்படுகிறது. தகவலை அனுப்பும் போது ஒவ்வொரு அனுப்புகையும் வெவ்வேறு திறவிகளால் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப் படலாம். மறுமுனையில் ஒருமுறை மறைவிலக்கத்துக்குப் பயன்படுத்திய திறவியை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த நுட்பம், தகவலின் பாதுகாப்பினை அதிகரிக்கிறது.


dynamic memory allocation - இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு: நிகழ்நேர நினைவக ஒதுக்கீடு : ஒரு நிரல் அல்லது செயலாக்கத்துக்கான நினைவகப் பகுதியை இயக்க நேரத்தில் ஒதுக்கீடு செய்தல். நிரலின் கோரிக்கைக்கு ஏற்ப, முறைமை நினைவகக் குவியலில் இத்தகைய ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


dynamic method dispatch : இயங்கு நிலை வழிமுறை அனுப்புகை.


dynamic object : இயங்குநிலைப் பொருள்.


dynamic operand : இயங்குநிலை செயலேற்பி.


dynamic page: இயங்குநிலை பக்கம்: அசைவூட்ட ஜிஃப்கள், ஜாவா அப்லெட்டுகள், ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகளை உள்ளடக்கிய ஹெச்டிஎம்எல் ஆவணம்.


dynamic random access memory (DRAM) : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகம்.


dynamic slip : இயங்குநிலை ஸ்லிப்: இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐபீ முகவரி ஒவ்வொரு முறையும் புதிதாக (ஒரு பட்டியலிலிருந்து) ஒதுக்கப்படும்.


dynamic storage : இயங்குநிலை சேமிப்பகம்.


dynamics : இயங்குவியல்.


dynamic web page : இயங்குநிலை வலைப் பக்கம் : நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் உலா வரும் பயனாளரின் தேடல் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம். .


.dz : டிஇஸட் : இணையத்தில் ஒர் இணையதளம் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பெயர்.


11