பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Fatware 183 FDDI

fatware

கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தகவல், வழங்கன் கணினியிலேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணியையே கிளையன் செய்யும்.

tatware : கொழுத்த மென்பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள்.

fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம்: பழுது சகிப்பு நிலை.

favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்ப மான விருப்பத் தளங்கள்; விரும்பு பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க் கும் வலைப்பக்கம், மைக்ரோ சாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோர ரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shotcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக் குறி (Book Mark) என்று பெயர்.

favourites folder கவர்விகள் கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும் பும் வலைப்பக்கங்களுக்கான குறு வழிகளடங்கிய கோப்புறை.

மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல் (Hotlists) என்று வேறுபல பெயர் களில் அழைக்கப்படுகின்றன.

fax programme : தொலை நகலி செயல்முறை; தொலை நகலி கட்ட ளைத் தொடர் தொலை நகலி நிரல்.

tax server : தொலை நகல் வழங்கன்.

F connector : எஃப் இணைப்பி : ஒளிக்காட்சி (Video) பயன்பாடுகளில் எஃப் இணைப்பிகள் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒர் இணையச்சு (Coaxial) இணைப்பி. இணைக்கும்போது திருப்பாணி (Screw) ஒன்று தேவை.

FDDI எஃப்டிடிஐ : ஒளியிழை பகிர்ந்தமை தரவு இடைமுகம் என்று பயன்படும் Fiber Distributed Data Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதி வேக ஒளியிழை குறும்பரப்புப் பிணையங்களுக்காக அமெரிக்க தேசிய தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் (ANSI) உருவாக்கிய செந்தரம். வில்லை வளைய (Token Ring) கட்ட மைப்பில் அமைந்த பிணையங்களில் வினாடிக்கு 100மெகா துண்மிகள் (மெகாபிட்ஸ்) வீதம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வரை