பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

free software foundation

197

friction feed


Free Software Foundation : கட்டறு மென்பொருள் அமைப்பு (கழகம்) : ஒரு மென்பொருளைப் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, வியாபார நோக் கின்றி மறுவினியோகம் செய்ய பொதுமக்களுக்கு கட்டற்ற உரிமை இருக்க வேண்டும் என்ற நோக் கத்தை முன்னிறுத்தி திரு.ரிச்சர்டு ஸ்டால்மேன் என்பவர் உருவாக்கிய அமைப்பு. யூனிக்ஸை ஒத்த ஜிஎன்யூ மென்பொருளின் பராமரிப்பை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. ஜிஎன்யூ மென்பொருளை இலவச மாக வழங்கலாம். மாற்றி அமைக்க லாம். விலைக்கு விற்பது கூடாது.

free space : வெற்று இடம்; காலி இடம் : ஒரு நெகிழ்வட்டு அல்லது ஒரு நிலைவட்டில் தகவல் எழுதப் படாத வெற்று (காலி) இடத்தைக் குறிக்கும்.

freeze columns : நெடுக்கைகளை நிலைப்படுத்து

freeze frame video : உறைசட்ட ஒளிக்காட்சி : உருவம் சில வினாடி களுக்கு ஒரேயொரு முறை மட்டுமே மாறக்கூடிய ஒளிக்காட்சிப் படம்.

freeze panes : பாளங்களை நிலைப்படுத்து

frequency : அதிர்வலை / அதிர்வெண் / அலைவரிசை.

frequency hopping : அலைவரிசைத் துள்ளல் : ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஒரு குறிப் பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ் வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறை யினால் அத்துமீறிய குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். ஒற்றை அலை வரிசையை செயலற்றதாக்குவது போல் இதனைச் செய்ய முடியாது.

frequency modulation encoding : அலைவரிசைப் பண்பேற்ற குறியீடு : சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும். வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப் படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத்திசைவுத் தகவலும் (Synchronicing information) வட்டின் மேற்பரப்பில் பதியப்படுகிறது. கடிகாரத் துடிப்பு களும் வட்டில் பதியப்படுவதால் அதிகமான வட்டுப் பரப்பு தேவைப் படுகிறது. எனவே எஃப்எம் குறி யீட்டுமுறை பிறமுறைகளோடு ஒப்பிடுகையில் திறன் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது இதை விடச் சிறந்த முறைகளும் உள்ளன. திருத்தப்பட்ட அலைவரிசைப் பண் பேற்றக் குறியீட்டுமுறை (Modified Frequency Modulation Encoding - MFM) என்பது அவற்றுள் ஒன்று. தொடர் நீள வரம்பு (Run Length Limited - RLL) குறியீட்டு முறை சற்றே சிக்கலானது. ஆனால் எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த குறியீட்டுமுறை எனக் கருதப்படுகிறது.

frequency response: அலைவரிசைப் பிரதிபலிப்பு : ஒரு கேட்பொலி சாதனம், குறிப்பிட்ட உள்ளிட்டு சமிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கி, வெளியீடாகத் தரும் அலைவரிசைகளின் வரம்பு.

frequency, ultra high : மீவுயர் அதிர்வலை

friction feed : உராய்வு செலுத்தி : அச்சுப் பொறிக்குள் தாளைச் செலுத் தும் ஒரு முறை. பொதுவாக, இருபுறமும் துளையிடப்பட்ட தாள்