பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.gr

208

Graphical kernal syatem


சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.gr:ஜி.ஆர்:ஓர் இணையதள முகவரி கிரீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

graceful exit:நேர்த்தியான வெளியேற்றம்: கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில் கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை.செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும்போது,கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும்.அல்லது இச்செயலாக்கத்தைத் தொடக்கி வைத்த முந்தைய செயலாக்கம் எடுத்துக் கொண்டுவிடும்.கணினி, செய்வதறியாது விக்கித்து நின்றுவிடும் நிலை தவிர்க்கப்படும்.

grade of service:சேவைத் தரம்: பொதுத் தொலைபேசிக் கட்டமைப்பு போன்ற ஒரு தகவல் தொடர்பு பங்கீட்டுப் பிணையத்தில் பயனாளர் ஒருவருக்கு,அனைத்துத் தடங்களும் பயன்பாட்டில் உள்ளன;சிறிது நேரங்கழித்துத் தொடர்பு கொள்ளவும்,என்ற செய்தி கிடைப்பதற்குரிய வாய்ப்புநிலை.ஒரு பிணையத்தின்,தகவல் போக்குவரத்தைக் கையாளும் திறனை மதிப்பிட, சேவைத்தர அளவீட்டுமுறை பயன்படுகிறது.ஒரு குறிப்பிட்ட கால நேரத்துக்கு இத்திறன் மதிப்பிடப்படுகிறது.சேவைத்தரம் 0.002 என மதிப்பிடப்பட்டால் ஒரு பயனாளரின் அழைப்பு மறுமுனை சென்றடைய அந்தக் குறிப்பிட்ட கால நேரத்தில்(காலை,மாலை,இரவு)99.8விழுக்காடு வாய்ப்புள்ளது என்று பொருள்.

grade sheet:மதிப்பெண் சான்றிதழ்.

gradient:படித்தரம்/படித்திறன்.

graphical output:வரைபட வெளியீடு.

grat port:வரைவுத் துறை:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச்சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு.திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை பின்னணியிலுள்ள சாளரத்திற்கோ அல்லது ஒரு கோப்பிலோ சேமிக்க இந்த வரைவுத்துறை பயன்படுகிறது.

graftal:வரைவுக்கூறு;வரைவுரு: வரைவியல் வடிவங்களின் தொகுதி.மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக்காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில்,மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகின்றன. துணுக்குருக்களை(Fractals)ஒத்திந்த போதிலும் வரைவுருக்களை இணைத்து உருத்தோற்றங்களை வடிவமைத்தல் மிகவும் எளிது.

grammer check:இலக்கணச்சரிபார்ப்பு.

grandfather file:பாட்டன்க் கோப்பு;தாத்தா கோப்பு.

grand total: இறுதிக் கூட்டுத்தொகை.

graphical design:வரைகலை வடிவமைபபு.

Graphical Kernel System:வரைகலை கருவக முறைமை: வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ (ISO) அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவதில்லை.பயன்பாட்டுத் தொகுப்பு நிலையிலேயே