பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

icon parade

226

IE


யான பிற தகவல்களையும் தரக் கூடிய இணைய நெறிமுறை. எடுத்துக்காட்டாக, அடைய முடியாத இலக்கு பற்றிய தகவலை ஒரு கணினியிலுள்ள ஐபீ மென்பொருள் இன்னொரு கணினிக்குத் தெரிவிக்க உதவுகிறது.

icon parade : அடையாள அணி வகுப்பு; சின்ன அணிவகுப்பு : ஒரு மெக்கின்டோஷ் கணினி இயக்கப் படும்போது திரையில் வரிசையாகத் தோற்றமளிக்கின்ற சின்னங்கள்.

.id : ஐடி : ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

IDE : ஐடிஇ : ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப் பொருள் படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் வட்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். தனியான தகவி அட்டைகள் தேவையில்லை. பீசி/ஏட்டீ கணினிகளில் ஐபிஎம் பயன்படுத்திய கட்டுப்படுத்திகளுடன் ஒத்தியல்பானது. அதே வேளையில் முன்னோக்கிய இடைமாற்று நினைவகம் (Lookahead Caching) கொண்டது.

identification :அடையாளம் காணல்.

identification, file : கோப்பு அடை யாளம் காணல்.

identifiar, lable: சிட்டை காட்டி அடையாளம் காட்டி.

identity of server : வழங்கன் அடையாளம், தலைமைக்கணினிஅடையாளம்.

idiot box : அறிவிலிப் பெட்டி.

idle : செயலற்ற : 1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல்படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல்.

idle character : செயலற்ற குறி : தகவல் தொடர்பில், உடனடியாக அனுப்பவேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது, அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு.

idle interrupt :செயலற்ற குறுக்கீடு: ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு.

idle state : செயலற்ற நிலை : ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலை.

IDSL ஐடிஎஸ்எல்: இணைய இலக்க முறை சந்தாதாரர் தடம் எனப் பொருள்படும் Internet Digital Subscriber Line என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாதாரணத் தொலைபேசி இணைப்புக் கம்பி வழியாகவே வினாடிக்கு 1.1 மெகாபிட் வரை இணையத் தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்ற அதிவேக இலக்கமுறைத் தகவல் தொடர்பு சேவை. ஐடிஎஸ்எல், சேவையானது ஐஎஸ்டிஎன் மற்றும் இலக்கமுறை சந்தாதாரர் தடத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலப்பு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

ie : ஐஇ : ஒர் இணைய தளம் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

IE : ஐஇ : 1. தகவல் பொறியியல் எனப்பொருள்படும் Information Engineering என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு