உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

input/output statement

236

installation programme


இவற்றை சாதனக்கட்டுப்படுத்தி, உ/வெ கட்டுப்படுத்தி என்றும் அழைப்பர்.

input/output statement : உள்ளீட்டு/ வெளியீட்டுக் கூற்று : நினைவகத்துக்கும், உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனத்துக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு நிரலில் பயன் படுத்தப்படும் கட்டளை,

input/output unit : உள்ளீட்டு/வெளியீட்டுப் பகுதி.

insert : செருகு.

insert file : கோப்பைச் செருகு.

insert ((INS) key: செருகு விசை

insert page : பக்கத்தைச் செருகு.

insert menu : செருகு பட்டியல்

insert page : இடைச் செருகு பக்கம்.

insertion method :செருகு முறை .

insertion point : செருகு இடம்.

insertion sort : செருகு வரிசை யாக்கம் : பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப்படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து, முதல் உறுப்பினைவிடப் பெரிதா, சிறிதா எனப் பார்த்து முன்னாலோ அல்லது பின்னாலோ இணைக்க வேண்டும். அடுத்த உறுப்பினை எடுத்து, வரிசையாக்கப் பட்டியலில் பொருத்தமான இடத் தில் செருக வேண்டும். இவ்வாறு ஒரு நேரத்தில் ஒர் உறுப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு பட்டியலில் அதற்குரிய இடத்தில் செருகி எவ்வளவு பெரிய வரிசையாக்கப் பட்டியலையும் உருவாக்க முடியும். குவித்து வைக்கப்பட்டுள்ள சீட்டுக் கட்டில் ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கையில் வரிசையாக அடுக்கும் முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கோவைகளை (Arrays) பொறுத்தமட்டில் இம்முறை திறனற்றது. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினைச் செருகும்போதும் பிற உறுப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தொடுப்புப் பட்டியல்களுக்கு (Linked Lists) இந்த முறை மிகவும் ஏற்றது.

insight : உள்ளொளி; உள்பார்வை; அகப்பார்வை.

Installable File Systern Manager : நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர்  : விண்டோஸ் 95இல் கோப்புக் கட்டுமானத்தில் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. கோப்பு முறைமையின் பல்வேறு கூறுகளையும் விருப்பப்படி அணுகுவதற்கு இம்மேலாளரே வழியமைத்துக் கொடுக்கிறது.

installation programme : நிறுவு நிரல்: ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகளைப் பின் பற்ற வேண்டியிருக்கும். பயனாளர் பல்வேறு கட்டளைகளை நினைவு வைத்துக் கொண்டு நிறுவும் பணியைத் தொடர வேண்டியிருக்கும். இத்தகைய சிக்கலான பணியை எளிமைப்படுத்தி பயனாளரைத் தோழமையுடன் வழிநடத்தி, மென்