பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interpreted language

246

invalid


interpreted language : ஆணை மாற்று மொழி : எழுதப்பட்ட நிரலை ஒவ்வோர் ஆணையாக பொறி மொழிக்கு மொழிபெயர்த்து உடனுக்குடன் இயக்கும் முறை கொண்ட கணினி மொழி. பேசிக், லிஸ்ப், ஏடிஎல் ஆகிய மொழிகள் பொதுவாக ஆணை மாற்று மொழிகள் எனப்படுகின்றன. ஆனாலும், பேசிக் மொழி நிரலை பொறி மொழிக்கு ஒட்டுமொத்தமாக மொழிபெயர்த்து இயக்கும் மொழி மாற்றிகளும் (Compiler) உள்ளன.

interprocess communication : பணிகளிடை தகவல் தொடர்பு :ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றவல்ல கணினி முறைமைகளில் இரண்டு பணிகளுக் கிடையே அல்லது செயலாக்கங்களுக்கிடையே தகவல் தொடர்பை நிகழ்த்தும் முறை. குழாய் (pipes), அணுகல்குறி (semaphores), பகிர்வு நினைவகம், சாரைகள் (Queues), சமிக்கைகள் மற்றும் அஞ்சல்பெட்டி எனப் பல்வேறு முறைகளில் இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

interrupt, automatic : தானியங்கு குறிக்கீடு; தானியங்கு இடைமறிப்பு.

interrupt controller : குறுக்கீடு கட்டுப்படுத்தி

interrupt-driven processing : குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம் :ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறை வேற்றப்பட்டபின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறை வேற்றத் தயாராக இருக்கும். அடுத்து செய்யவிருக்கும் பணி முன்பு விட்டு வந்த பணியாகவோ, இன்னொரு குறுக்கீடு மூலம் உணர்த்தப்படும் பணியாகவோ இருக்கலாம். பயனாளர் விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்துவது, நெகிழ் வட்டகத்தில் ஒரு வட்டினைச் செருகியதும் அது தகவல் பரிமாற்றத்துக்கு தயார் நிலையில் இருத்தல் போன்றவை குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கங்களாகும்.

interruption : குறுக்கீடு

interruption, machine : எந்திரக், குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு.

intraware : அக இணைய மென் பொருள் : ஒரு குழுமத்தின் அக இணையத்தில் (Intranet) பயன் படுத்தப்படும் குழு மென்பொருள்/ இடை மென்பொருள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மின்னஞ்சல், தகவல் தரம், பணிப்பாய்வு, மற்றும் உலாவிப் பயன்பாட்டுத் தொகுப்புகளை உள்ளடக்கியவை.

intrinsic font :உள்ளுறை எழுத்துரு  :பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு.

intruder ; அத்துமீறி : ஒரு கணினியில் அல்லது ஒரு கணினிப் பிணையத்தில் பொதுவாகத் தீங்கெண்ணத்துடன் அனுமதியின்றி நுழைகின்ற ஒரு பயனாளர் அல்லது அத்துமீறி நுழைகின்ற ஒரு நிரல்.

.in.us  : இன்.யுஎஸ் : இணையத்தில் ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

invalid : செல்லாத: பிழையான; தவறான பொருந்தாத : 1. கணினியில்