பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IP milticasting

248

.iq


ஓர் அங்கமாக இருந்து செயல்படு வது. தகவல்/செய்திகளை பொதி களாகப் பிரித்து அனுப்பும் பணியை யும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரி யத்தில் அடுக்கில் பிணைய அடுக் கில் (Netwck Layer) இது செயல்படுகிறது.

IP multicasting : ஐபீ குழுவாக்கம் : குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழு வாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப் படையில் டீசிபீ/ஐபீ பிணையமாக மாற்றியமைக்கும் முறை. புரவன் கணினிகள் (Hosts) குழுவாக்கிய செய்தித் தொகுதிகளை அனுப்பும்/ பெறும். இலக்கின் முகவரியில் ஒற்றை ஐபி முகவரிக்கும் பதிலாக ஐபீ புரவன் குழு முகவரிகளைக் கொண்டிருக்கும். ஒரு புரவன் என் பது ஒரு குழுவின் உறுப்பினராகக் கருதப்படும். இணையக் குழு மேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol) இதனை நெறிப்படுத்தும்.

IPng : ஐப்பிங்; அடுத்த தலைமுறைக் கான இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு வடிவம். மூல இணைய நெறி முறையை (IP) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. சிறந்த பாது காப்புக் கொண்டது. ஐபீ முகவரி முந்தையதைவிட நீளமானது; 16 பைட்களால் ஆனது.

IP spooting : ஐபீ ஏமாற்று ; ஒரு கணினி அமைப்புக்குள் அத்துமீறி நுழையும் பொருட்டு பொய்யான அனுப்புநர் ஐபி முகவரியை இணையத் தகவல் தொடர்பில் செருகும் செயல்.

IP switching : ஐபீ இணைப்பாக்கம் : இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறு வனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையில் (Asynchronous Transter Mode-ATM) அதிவேகத்தில் அனுப்ப வழிசெய்கிறது.

IPv6 : ஐபீவி6 : இணைய நெறிமுறை பதிப்பு 6 என்று பொருள்படும் Internet Protocol Version 6 67 6T தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அடுத்த தலைமுறை இணைய நெறிமுறையாக, இணையப் பொறி யியல் முனைப்புக்குழு (Internet Engineering Task Force) 1995 செப்டம்பர் 2-ல் பரிந்துரைத்த நெறி முறை. இதன் முந்தைய பெயர் ஐப்பிங் (IPng).

IPX/SPX : ஐபீஎக்ஸ்/எஸ்பீஎக்ஸ் : நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இணைந்த டீசிபி/ஐபீ நெறி முறைக்கு இணையானது.

.iq : ஐகியூ : ஓர் இணைய தளம் ஈராக் நாட்டைச் சேர்ந்தது என்ப தைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.