பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jumper

256

just in time



jumper : ஜம்ப்பர்; செருகி : ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்) இணைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.

jump instruction : தாவல் ஆணை : கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன்படுத்தப்படும் ஆணை, நுண்செயலி ஆணைத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்குகிறது. நிரலின் இயல்பான வரிசைமுறை ஒட்டத்தை மாற்றியமைக்க இவ்வாணை பயன்படுகிறது.

junction : சந்தி : 1. இரண்டு அல்லது மேற்பட்ட மின் உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் புள்ளி. 2. N-வகை மற்றும் P-வகை குறை கடத்திகள் இணைகின்ற இடம்.

junk mail : கூள மின்னஞ்சல், குப்பை அஞ்சல்.

justified : இருபுற ஓரச்சீர்மை,

justity : ஓரச்சீர்மை; நேரமைவு; சீரமைவு: ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்கும். வரிகளை ஒரச்சீர்மை செய்யும்போது சொற்களின் இடையே கூடுதல் இடவெளிகள் நிரப்பப்படும். அளவுக்கு அதிகமான இடவெளிகள் விடநேரின், வரியிறுதியிலுள்ள சொற்கள் கூறாக்கப்பட்டு ஒட்டுக்குறி (Hyphen) இடப்படும்.

just in time : சரியான நேரத்தில்: ஜப்பானிய நாட்டு கான்பான் (kanban) முறைமையின் அடிப்படையில் அமைந்த கையிருப்புக் கட்டுப்பாடு (inventory control), தொழிலக உற்பத்தி மேலாண்மை ஆகிய முறைமைகளை விளக்கும் சொல். இத்தகைய முறைமைகளில் தொழிலாளர்கள், ஏற்கெனவே நேரங்குறிக்கப்பட்ட பொருளுற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விற்பனை நிறுவனங்களிடமிருந்து சரியான நேரத்தில் பெற்றுவிடுவர். உற்பத்திப் பிரிவு தொழிலாளர்கள் தமது தேவைகளை ஒர் அட்டை மூலமாகவோ, கணினி வாயிலான கோரிக்கை மூலமாகவோ தெரிவிப்பர்.