பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

LPT

274

luggable computer


low voltage:குறைந்த மின்னழுத்தம்;தாழ் மின்னழுத்தம்.

LPT:எல்பீடி:வரி அச்சுப்பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர்.எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப்பொறித் துறைக்(port)கென ஒதுக்கப்பட்ட பெயர்.அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம்.எல்பீடி1,எல்பீடி2,எல்பீடி3 என அவை அழைக்கப்படும்.பிஆர்என் (PRN) என்பதும் அச்சுப்பொறியைக் குறிக்கும் தருக்கநிலைச் சாதனப் பெயராகும்.இதுதான் எம்எஸ் டாஸில் முதன்மை அச்சுநகல் வெளியீட்டுக்கான சாதனமாகக் கொள்ளப்படுகிறது.பெரும்பாலும், எம்எஸ்டாஸில் எல்பீடீ என்பதும் பிஆர்என் என்பதும் ஒன்றாக இருக்கும்.

.lr:எல்ஆர்:ஓர் இணையதள முகவரி, லைபீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ls:.எல்எஸ்:ஓர் இணையதள முகவரி, லெசோத்தோ நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ls:எல்எஸ்:யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை.நடப்புக் கோப்பகத்திலுள்ள உள்கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன் குறிப்பிட்டு அதன் உள்ளடக்கத்தைப் பெற முடியும்.இணையத்தில் ஏராளமான எஃப்டீபீ தளங்கள் பலவும் யூனிக்ஸ் முறைமையில் இயங்குபவை என்பதால் அத்தளங்களிலும் இக்கட்டளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

LS-120:எல்எஸ்-120:ஓர் ஒற்றை 3.5 அங்குல நெகிழ்வட்டில் 120 எம்பி தகவலைச் சேமிக்கும் திறனுள்ள ஒரு நெகிழ்வட்டு இயக்ககம். எல்எஸ்120 இயக்ககங்கள் பிற நெகிழ்வட்டு வடிவாக்கங்களுக்கும் ஒத்திசைவானவை.

.lt:எல்டி:ஓர் இணையதள முகவரி லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.lu.எல்யூ:ஓர் இணையதள முகவரி லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

LU:எல்யூ:தருக்க அலகு எனப்பொருள்படும் Logical Unit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஓர் ஐபிஎம் எஸ்என்ஏ பிணையத்தில் ஒரு தகவல் தொடர்பு உரையாடலின் தொடக்கம் அல்லது முடிவைக் குறிக்கும் புள்ளி.

LUG:எல்யூஜி: Linux Users Group என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

luggable computer:எடுத்துச்செல் கணினி:கைப்பெட்டிக் கணினி:1980களின் தொடக்கத்தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள்.இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டி அடிப்படையிலான காட்சித் திரைகளைக் கொண்டிருந்தன.20 பவுண்டுக்கு மேல் எடை கொண்டவை.நடுத்தரக் கைப்பெட்டியின் அளவுடையவை.எனவேதான் இப்பெயர் ஏற்பட்டது.