பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



memory power

285

message reflection


 பரப்பினைக் கொண்டுள்ள கணினி கள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங்களுக்கு இடம் தருகின்றன.

memory power : நினைவாற்றல்.

memory, random access : குறிப்பிலா அணுகு நினைவகம்.

memory size : நினைவக அளவு : ஒரு கணினியின் நினைவகக் கொள் திறன். பெரும்பாலும் மெகா பைட்டு களில் அளவிடப்படும்.

memory slot : நினைவகச் செருகு வாய்; நினைவகப் பொருத்துமிடம்.

memory, sniffing : முகர்வு நினைவகம்.

memory, volatile : நிலையா நினைவகம்.

menu : பட்டி : ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறை வேற்றுதல் அல்லது ஒர் ஆவணத்தை வடிவமைத்தல் போன்ற பணியாக இருக்கலாம். வரைகலை இடை முகத்தை வழங்குகின்ற பல பயன் பாட்டு நிரல்கள், இதுபோன்ற தேர்வுப் பட்டியை பயன்படுத்துகின்றன.

பயனாளர்கள் நிரல்கட்டளை களையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லாத ஒர் எளிய மாற்று வழியை இதுபோன்ற பட்டி கள் வழங்குகின்றன.

menu application : பட்டிப் பயன்பாடு.

menu block : பட்டிப் பகுதி.

menu defnitions : பட்டி வரையறைகள்.

menu driven : பட்டி வழிச் செலுத்தி; பட்டி முடுக்கம்.

menu option : பட்டித் தேர்வு..

merge cell : கலம் இணைத்தல் : கலம் சேர்த்தல் : சொல்செயலிப் பயன்பாடு களில் ஒர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களை ஒரே கலமாக்க உதவும் கட்டளை.

merge document : ஆவணச் சேர்ப்பு; இணைப்பு ஆவணம்; ஆவண இணைப்பு.

merge workbooks : பேரேடுகளை ஒன்றிணை.

mesa : மேடு : ஜெர்மானியம் அல்லது சிலிக்கான் தகடுகளில் அவற்றைச் செதுக்கும்போது பாது காக்கப்பட்டு அதன் காரணமாய், செதுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளை விட சற்றே உயரமாய்த் தோற்ற மளிக்கும் ஒரு பகுதி.

message box : தகவல் பெட்டி; செய்திப் பெட்டி.

message of the day : இன்றையச் செய்தி : ஒரு பிணையத்தில் அல்லது பல் பயனாளர் கணினிகளில் அல் லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தி அறிக்கை. பெரும்பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்பிற்குள் நுழையும்போதே இச்செய்தி காட்டப் பட்டுவிடும்.

message panes : செய்திப் பலகங்கள்.

message reflection : செய்தி பிரதி பலிப்பு : பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற் றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு.