உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



modem port

292

modified frequency



தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக்கப்பட்டுள்ளன.

modem port : இணக்கித் துறை : ஒரு சொந்தக் கணினியில் புற இணக்கி யை (மோடத்தை) இணைத்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு நேரியல் (Serial port).

moderated : கண்காணிக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட : செய்திக் குழு, அஞ்சல் பட்டியல் அமைப்பு களிலும், அல்லது பிற செய்திப் பரி மாற்ற அமைப்புகளிலும் பொருத்த மில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படு வதற்கு முன்னரே நீக்கிவிடும் உரிமை அக்குழுவின் கண்காணிப் பாளருக்கு உண்டு. இத்தகைய குழுச் செய்திப் பரிமாற்றங்களில் அனை வரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரி கமான கருத்துரைகளையே அஞ்சல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

moderated discussion : முறைப் படுத்தப்பட்ட உரையாடல் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடைபெறு வது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரி மாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச் செய்தி நடைபெற்றுக் கொண்டிருக் கும் உரையாடலுக்கு பொருத்த மானதா என்பதை கண்காணிப்பாளர் முடிவு செய்வார். பொருத்தமானது எனில் அச்செய்தியை குழு முழுமைக்கும் சமர்ப்பிப்பார். முறைப்படுத்தப்படாத உரையாடல் களைவிட முறைப்படுத்தப்பட்ட உரையாடல் அதிக மதிப்புடையது. ஏனெனில் முறையற்ற செய்திகளை கண்காணிப்பாளர் ஒரு காவலாளி போல் இருந்து தடுத்து விடுகிறார். சிலவேளைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபாசச் செய்திகளையும் அவர் வடிகட்டி விடுவார்.

moderator : இடையீட்டாளர், நடுவர், கண்காணிப்பாளர் : சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப் படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறை யற்ற செய்திகளைத் திருத்துவார், புறக்கணிப்பார் அல்லது வடிகட்டித் தடுத்து நிறுத்திவிடுவார்.

modification : திருத்தியமைத்தல்; மாற்றியமைத்தல்.

modification, address : முகவரி மாற்றியமைத்தல்; முகவரி திருத்தி அமைத்தல்.

modified frequency modulation encoding : திருத்தப்பட்ட அதிர் வலைப் பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தகவலைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப் படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசிய மில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக் கத்தைவிட அதிக அளவான