உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



network device driver

309

network layer


|

செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ள ஒருவகைத் தரவுத் தளம். பிணையத் தரவுத் தளம் படிநிலைத் தரவுத் தளம் போன்றது. ஒர் ஏட்டுக்கும் இன்னோர் ஏட்டுக்கும் தொடர்ச்சியான உறவுமுறை இருக்கும். சிறிய வேறுபாடும் உண்டு. கடுமையான கட்டமைப்பு இல்லாதது. எந்தவொரு ஒற்றை ஏடும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடுகளைச் சுட்ட முடியும். இரண்டு ஏடுகளுக்கிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்க முடியும். ஆனால் படிநிலைத் தரவுத் தளத்தில் இரு ஏடுகளுக்கு இடையே ஒரேயொரு பாதைதான். பெற்றோர் ஏட்டி லிருந்து குழந்தை ஏட்டுக்குப் பாதை உண்டு.

network device driver :பிணையச் சாதன இயக்கி: பிணையத்தில் இணைக்கப்பட்ட கணினியிலுள்ள பிணையத் தகவி அட்டையின் செயல் பாட்டைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். இது, பிணைய தகவி அட்டைக்கும் கணினியின் ஏனைய வன்பொருள் மற்றும் மென் பொரு ளுக்கும் இடையேயான தகவல் தொடர்பினை ஒழுங்குபடுத்துகிறது.

network diagram :பிணைய வரைபடம்: பிணைய வரிப்படம் .

network directory: பிணையக் கோப்பகம் : குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. பயனாளர் கோப்பகத்தை மட்டுமே அணுகமுடியும். வட்டினில் அக் கோப்பகம் தவிர பிற பகுதிகளையும் பயனாளர் அணுக முடியுமா என்பது, பிணைய நிர்வாகி அவருக்கு வழங்கியுள்ள அணுகுரிமைகளைப் பொறுத்தது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பிணைய கோப்பகம் பகிர்வுக் கோப்புறை (shared tolder) என்றழைக்கப்படுகிறது.

Network File System : Slsosoruš கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய பகிர்ந்தமை கோப்பு முறைமை ஆகும். விண்டோஸ் என்டி மற்றும் யூனிக்ஸ் பணிநிலையங்களின் பயனாளர்கள் தொலைதூரப் பிணையத்திலுள்ள கோப்புகளையும் கோப்பகங்களையும் அணுக முடியும்.

network interface card : பிணைய இடைமுக அட்டை.

network laser printer : பிணைய லேசர் அச்சுப்பொறி, பிணைய ஒளி யச்சுப்பொறி.

network latency :பிணைய நேரம் : ஒரு பிணையத்தில் இரண்டு கணினி களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

network layer :பிணைய அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்றாவது அடுக்கு. கணினிகளுக்கு இடையே யான தகவல் தொடர்புகளை வரை யறுக்கிறது. தரவுத் தொடுப்பு (Data link) அடுக்குக்கு மேல் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குத் தகவல் சென்றடைவதை உறுதி