உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pseudo machine

368

public object element


 pseudo machine : போலிப் பொறி; போலி எந்திரம்: இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அது போல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்களில் இயக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஜாவா மெய்நிகர் பொறியைக் (Java Virtual Machine-JVM) கூறலாம், ஒரு முறை பைட் குறிமுறையாக (Bytecode) மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜாவா புரோகிராம்களை (.class கோப்புகள்) எந்தக் கணினியிலுள்ள ஜேவிஎம்மிலும், மறுமொழி மாற்றம் செய்யாமலே இயக்க முடியும்.

.pt : .பீடீ : ஓர் இணைய தள முகவரி போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

public data network : பொதுத்தரவு பிணையம்.

public directory : பொதுக் கோப்பகம்: ஒரு எஃப்டிபீ வழங்கனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பகம். பெயரிலாப் பயனாளர்கள் (anonymous users) கோப்புகளைப் பெறவும் தரவும் இதனை அணுக முடியும். சுருக்கமாக pub என அழைக்கப்படும்.

public domain :பொதுக் களம் : பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின்கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக நகலெடுக்கலாம். திருத்தலாம். எந்தப் பயனுக்காகவும் எந்த வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவையும், உரைகள் மற்றும் மென்பொருள் பலவும் பொதுக்களத்தின் கீழேதான் உள்ளன. ஆனால் பதிப்புரிமை பெற்ற படைப்புகள் இணையத்தில் பொதுக் களத்தில் இடம்பெறுவதில்லை.

public key : பொது மறைக்குறி: பொதுத் திறவி : தனித்திறவி, பொதுத் திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத் திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்க முறைக் ஒப்பமாகிய (digital signature)தனத்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார்.

public key encryption: பொதுத்திறவி மறையாக்கம்: மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன் படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்க முறை. பொதுத் திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக் குரியவர் தனக்கே உரிய தனித்திறவி மூலம் மறைவிலக்கம் செய்து கொள்வார். இலக்கமுறைக் ஒப்பத்தைப் பொறுத்தவரை இந்த வழிமுறை எதிர்முறையானது. அதாவது செய்தியை அனுப்புபவர் இரகசியத் திறவியைப் பயன்படுத்தி ஒரு தனித்த மின்னணு எண்ணை உருவாக்குகிறார். இச் செய்தியினைப் படிக்க விரும்புபவர் அதற்கேற்ற பொதுத் திறவி மூலம் பரிசோதித்து குறிப்பிட்ட நபரிடமிருந்துதான் செய்தி வந்ததா என அறிந்து கொள்ளலாம்.

public object ejement : பொதுப் பொருள் உறுப்பு.