பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radix notation

373

RAID


கழித்தால் வரும் விடையே அந்த எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் எனப்படுகிறது. 0 முதல் 9 வரை பத்து இலக்கமுள்ள பதின்ம எண் முறையில் ஐந்து இலக்க எண்களை எடுத்துக் கொள்வோம். இதில் அதிகப்பட்ச மதிப்புள்ள எண் 99999. 01234 என்ற எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது 9999901234-98765 ஆகும். ஆக, இந்த எண் முறையில் எந்தவோர் எண்ணின் குறைஎண் (Negative) அடியெண்ணுக்கு ஒன்றுகுறைந்த நிரப்பெண்ணோடு ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும் (ஏனெனில் - a+a=0). இரும எண்முறையில் இரண்டு இலக்கங்களே உள்ளன. இங்கு அடியெண் 2. அடியெண் ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது 1-ன் நிரப்பெண் (1's complement)ஆகும்.மின்சுற்று அமைப்பில் தலைகீழாக்கி (Inverter) மூலம் ஓர் இரும எண்ணின் ஒன்றின் நிரப்பெண்ணை எளிதாகப் பெறலாம்.

1 0 1 0 ->ஓர் இரும எண்

↓ ↓ ↓ ↓ -> தலைகீழாக்கிகள்

0 1 0 1 -> ஒன்றின் நிரப்பெண்

radix notation : அடியெண் குறிமானம்; அடிப்படை எண் குறிமானம்.

radix sorting algorithm : அடியெண் வரிசைமுறையாக்கப் படிமுறை : ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப் படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0.999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசைப்படுத்தும் முறையைப் பார்ப்போம். முதலில் எண்களின் பட்டியல், நூறு மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் 10 குழுவாகப் பிரிக்கப்படும். பிறகு ஒவ்வொரு குழுவும் பத்து மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் பத்துப் பட்டியல்களாக வரிசைமுறைப்படுத்தப்படும். இறுதியில் ஒவ்வொரு பட்டியலும் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வரிசை முறைப்படுத்தப்படும். இந்தத் தருக்கப்படி முறை இரும மதிப்பு அடிப்படையில் உறுப்புகளை வரிசைமுறைப்படுத்த மிகவும் திறன் வாய்ந்ததாகும். ஒவ்வொரு குழுவும் அதிகப்பட்சம் இரண்டு குழுக்களையே கொண்டிருக்கும். ஒப்பீடும் இரண்டு இலக்கத்தோடுதான்.

rag : பிசிறு; பிசிறு ஓரம்; ஓரப்பிசிறு: அச்சிடப்பட்ட ஒரு பக்கத்தில் உரைப்பகுதியின் வரிகள் இடப்புற அல்லது வலப்புற ஓரத்தில் ஒரே சீராக இல்லாமல் முன்பின்னாக இருத்தல். இக்குறைபாடில்லாமல் தவிர்க்க ஆவணம் உருவாக்கப்படும் போதே ஓரச்சீர்மை (Justification) செய்யப்பட வேண்டும். ஒருபுறமோ அல்லது இருபுறமோ இத்தகு சீர்மை செய்யப்படலாம்.

ragged right : வலப்புற பிசிறு: அச்சடிக்கப்பட்ட உரைப்பகுதியில் வரிகள் வலப்புறத்தில் நேர்சீராக முடிவுறாமல் முன் பின்னாக முடி வுறும் நிலை. கடிதங்கள் மற்றும் பிற சொல்செயலி ஆவணங்கள் இடப் புறம் ஓரச் சீர்மையுடன் இருக்கும். வலப்புறம் பிசிறுடன் காணப்படும்.

RAID : ரெய்டு : தனித்த வட்டுகளின் மிகைக் கோவை என்று பொருள் படும் Redundant Array of Independent Disks என்ற தொடரின் தலைப்