பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



redundancy code

381

reference parameter


redundancy code : மிகைமைக் குறிமுறை.

reel : சுருள்.

reengineer : மறுசிந்தனை ; மறு வரையறை : வழக்கமாகப் பின்பற்றி வந்த செயல்முறைகளில், செயல் பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறுசிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி யமைத்தல் - புதிய தொழில்நுட்பத் கின் பலன்களை முற்றாக நுகர வேண்டும் என்பதே நோக்கம்.

reengineering : மறுசிந்தனை ; மறு வரையறுப்பு; மீட்டுருவாக்கம் : 1. ஒரு மென்பொருளைப் பொறுத்தவரை அதன் பலவீனங்களைக் களைந்து கூடுதலான பயன்களைச் சேர்த்து அதனை வலுவுள்ளதாக்குதல். 2. நிறுவன மேலாண்மையைப் பொறுத்த வரை உலகப் பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிப்பதற்கும் விரிவடைந்து கொண்டே செல்லும் தொழிலாளர் கூட்டத்தைத் திறமை யாக மேலாண்மை செய்யவும் தகவல் தொழில்நுட்பக் கோட்பாடு களைச் செயல் முறைப்படுத்துதல்.

reference' : குறிப்பி' : சி++ நிரலாக்க மொழியில் ஒரு தகவல் இனம். குறிப்பியை அறிவிக்கும்போதே அதில் ஒரு மாறியின் மூலம் தொடக்கமதிப்பிருத்த வேண்டியது கட்டாயம். அந்த மாறியின் மாற்றுப் பெயராக அக் குறிப்பி செயல்படும். அதாவது மாறிக்குப் பதிலாகக் குறிப்பியையே பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு. int n = 25; int& r = n) n என்பது int என்னும் தரவினத்தில் ஒரு மாறி. r என்பது n-ஐக் குறிக்க உருவாக்கப்பட்டுள்ள குறிப்பி, cout <<r; என்று கட்டளை அமைத்தால் 25 என (n-ன் மதிப்பு) காட்டும். n-ன் மாற்றுப் பெயர்போல | செயல்படும். 2. # ஜாவா, சி மொழிகளில் ஓர் இனக்குழுவில் (Class) உருவாக்கப்படும் இனப் பொருளை (Object) குறிப்பதற்குப் பயன்படும் மாறி (Variable), குறிப்பி, அடுக்கை நினைவகத்திலும், இனப் பொருள், குவியல் (Heap) நினைவகத் திலும் உருவாக்கப்படுகிறது. சி - மொழியிலுள்ள சுட்டுக்கு (Pointer) இணையற்றது.

reference2 : குறிப்பு : ஒரு கோவையில் (Array) உள்ள உறுப்பு அல்லது ஓர் ஏட்டிலுள்ள ஒரு புலம் போன்ற ஏதேனும் ஒரு மாறியை அணுகு வதற்குப் பயன்படுவது.

reference address : மேற்கோள் முகவரி; குறிப்பு முகவரி,

reference beam : ஆய்வுக் கற்றை .

reference.COM : ரெஃபரன்ஸ்.காம் : இணையத்திலுள்ள தேடுபொறி. 1,50,000க்கு மேற்பட்ட யூஸ்நெட் செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்கள், வலை மன்றங்கள் ஆகியவற்றின் முகவரிகளைச் சேமித்து வைத்துள்ள தளம். முகவரி: www.reference.com.

reference parameter : குறிப்பு அளபுரு: ஒரு துணைநிரல்கூறினை (sub-routine) அல்லது ஒரு செயற்கூறினை (function) அழைக்கும்போது ஒரு மாறியின் வெளிப்படையான மதிப்பினை அளபுருவாக அனுப்பிவைப்பதற்குப் பதிலாக மாறியின் முகவரியை அளபுருவாக அனுப்பிவைத்தல்.