பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thin client

444

three-dimensional model


thin client:மெல்லிய கிளையன்;சிறுத்த கிளையன்.

thin server:மெல்லிய வழங்கன்;சிறுத்த வழங்கன்: ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம்,பெரும்பாலான பயன்பாடுகள் கிளையன் கணினியிலேயே இயங்கும். இதுபோன்ற கிளையன்,கொழுத்த கிளையன் என வழங்கப்படுகிறது.எப்போதாவது தொலைதூர வழங்கனில் தகவல் செயல்பாடுகள் நடக்கும். இதுபோன்ற ஏற்பாடு சிறந்த கிளையன் செயல்திறனைக் கொடுக்கும்.ஆனால் நிர்வாகப் பணிகளைச் சிக்கலாக்கிவிடும்.எடுத்துக்காட்டாக, கிளையனிலிருக்கும் மென் பொருள்களை மேம்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

thin space:மெல்லிடவெளி;மெல்லிய இடவெளி: ஓர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி,எடுத்துக்காட்டாக,12-பாயின்ட் அளவுள்ள ஓர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும்.

thread:புரி.

third party:மூன்றாவதாள்; மூன்றாம் ஆள்;மூன்றாம் குழுமம்,தொடர்பற்றவர் தொடர்பிலாக் குழுமம்:ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் கணினிகள் மற்றும் புறச்சாதனங் களுக்குரிய உதிரிபாகங்களைத் தயாரித்து விற்றுவரும் குழுமத்தை இவ்வாறு அழைப்பர். பெரும்பாலும் பெரிய நிறுவனத்தோடு இவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்காது. கணினித் தயாரிப்பாளர்,கணினிப் பயனாளர் நேரடித் தொடர்புடைய இந்த இருவர்க்கும் தொடர்பில்லாத மூன்றாவது ஆள் என்ற பொருளில் இவ்வாறு வழங்கப்படுகிறது.

threaded discussion:கோத்த உரையாடல்; தொடரும் விவாதம்:ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில்,ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள்,எதிர்ப்பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப் படியோ,காலவரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது.

threaded newsreader:கோத்த செய்தி படிப்பி: செய்திக்குழுக்களின் செய்திகள்/அஞ்சல்கள்/பதில்களை ஒன்றன்கீழ் ஒன்றாய் ஒரே செய்தி போலக்காட்டும் செய்திப் படிப்பு நிரல். பதில்கள் தனித்தனியே அகர வரிசை/காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்காது.

threading:புரியாக்கம்: நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம்.(எ-டு) ஃபோர்த் (Forth),ஜாவா,சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது.ஃபோர்த் மொழியில், ஒவ்வொரு புரியாக்கப்பட்ட துணை நிரல் கூறுகளிலும் காணப்படும் பிற துணைநிரல்கூறுகளுக்கான அழைப்புகள் (ஃபோர்த் மொழியில் முன்வரையறுத்த ஒரு சொல்) அந்த நிரல்கூறுகளுக்கான சுட்டுகளால் (pointers) பதிலீடு செய்யப்படுகின்றன.

three address code:மும்முகவரிக் குறியீடு.

three-dimensional model:முப்பரிமாண மாதிரியம்:நீளம்,அகலம்,ஆழத்துடன் ஒரு பருநிலைப்