பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

victoria.ca

473

video display metafile


.victoria.ca:விக்டோரியா.சிஏ ஓர் இணையதள முகவரி கனடா நாட்டு விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

video capture device:ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்: தொடர்முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலைவட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்வு சாதனங்கள்,இலக்கமுறை ஒளிக்காட்சிகளை விசிஆரில் பயன்படுத்துவதற்கேற்ற தொடர்முறை சமிக்கைகளாக மாற்றும் திறன் படைத்தவை.

video clip:ஒளிக்காட்சித் துணுக்கு: ஒரு நீண்ட ஒளிக்காட்சிப்பதிவிலிருந்து துணித்து எடுக்கப்பட்ட ஒரு குறுகிய காட்சியை உள்ளடக்கிய கோப்பு.

video compression:ஒளிக்காட்சி இறுக்கம்: இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும் முறை.இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில்,24துண்மி(பிட்) நிறம் கொண்ட 640x480 படப்புள்ளி தெளிவுள்ள ஒர் ஒளிக்காட்சிப் படத்தின் ஒரு சட்டம் ஒரு மெகாபிட் அளவிருக்கும்.ஒரு நிமிடப்படம் ஒரு கிகாபைட் அளவிருக்கும்.படிமத்தின் இயல்பான தரம் குறையாவண்ணம் ஒளிக்காட்சி இறுக்கம் சாத்தியம்.

video conferencing:ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்; காட்சிவழி உரையாடல்; ஒளிக்காட்சிக் கருத்தரங்கு நிகழ்பட கலந்துரவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டு ஒரு கலந்துரையாடலில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதிகொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முறை ஒளிக்காட்சிகளையும், செயற்கைக்கோள் தொடர்புகளையும் பயன்படுத்தி இவ்வகைக் கலந்துரையாடல் நடைபெற்றது.தற்போது இறுக்கிச் சுருக்கப்பட்ட இலக்கமுறைப் படிமங்கள் விரிபரப்புப் பிணையம் அல்லது இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.56கே தகவல் தொடர்புத் தடம் உறை நிலை-சட்ட ஒளிக்காட்சியை ஏற்கிறது.1.54 எம்பிபீஎஸ் (T1) தடத்தில் முழு-அசைவு ஒளிக்காட்சிப் படங்களை அனுப்பிவைக்க முடியும்.

video display:ஒளிக்காட்சி திரை: ஒளித்தோற்றக் காட்சி சாதனம்; நிகழ்படக்காட்சி: கணினி வெளியீடான உரைப்பகுதி,வரைகலை போன்ற வற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன்பெற்ற ஒரு சாதனம்.

video display board:நிகழ்படக்காட்சி அட்டை; ஒளித்தோற்றக் காட்சி அட்டை: கணினியின் முதன்மை முறைமைப் பலகையின் அங்கமாக இல்லாமல்,ஒரு விரிவாக்க அட்டையாக இருக்கும் ஒளிக்காட்சித் தகவி.

video display metafile:ஒளி தோற்றக் காட்சி மீஇயல்கோப்பு: படிமங்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பி வைக்கத் தேவையான ஒளிக்காட்சித் தகவல்களைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.