பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wafer

483

wanderer


W

wafer-scale integration:மென் தகட்டு ஒருங்கிணைப்பு: ஒற்றை மென்தகட்டில் பல்வேறு நுண் மின்சுற்றுகளை ஒருங்கிணைத்து ஒரே மின்சுற்றாக கட்டுருவாக்குதல்.

WAIS:வெய்ஸ்: விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அடிப் படையிலான மென்பொருள்.இணையத்தில் குவிந்துகிடக்கும் ஏராளமான ஆவணங்கள் கருப்பொருள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவற்றின் இருப்பிட முகவரிகள் 400-க்கு மேற்பட்ட வெய்ஸ் வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறவுச்சொல் அடிப்படையில் அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப்பெற முடியும். திங்கிங் மெஷின் கார்ப்பரேஷன், ஆப்பிள் கம்ப்யூட்டர், டோவ் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெய்ஸை உருவாக்கினர். இயற்கை மொழி அடிப்படையிலான வினவல்களைப் பரிச்சீலிக்க இவர்கள் இஸட் 39.50 தர வரையறைகளைப் பயன்படுத்தினர். தனித்த வலைத்தளம் ஒன்றிலும் வெய்ஸ் நிரலை ஒரு தேடு பொறியாகப் பயன்படுத்த முடியும். சிலவேளைகளில் வெய்ஸ் மூலம் பெறப்படும் ஆவணப்பட்டியலில் தேவையற்ற தகவல்களும் இடம் பெறுவதுண்டு. வெய்ஸ் வழங்கனில் தகவலைத் தேட பயனாளர்கள் வெய்ஸ் கிளையன் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

waisindex:வெய்ஸ் சுட்டுக்குறிப்பு: 1.வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்பு களை அணுகுவதற்கு சுட்டுக் குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2.வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais://hostport/database என்பதுபோல் அமையும்.

Wallet PC:பணப்பைக் கணினி: சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் அளவுள்ள சிறிய அட்டை வடிவிலான கணினி. பணப்பை போன்றே பயன்பாடு உடையது. இதை வைத்துள்ள நபரின் மெய்நிகர் (virtual) அடையாளத்தைக் கொண்டிருக்கும். மேலும்,பணம்,பற்று அட்டைகள் மற்றும் பிற இன்றியமையாத் தகவல்களையும் கொண்டிருக்கும். நடமாடும் தகவல் மூலமாகவும் மற்றும் தகவல் தொடர்புக் கருவியாகவும் விளங்கும். இதுபோன்ற சாதனம், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தயாரிப்பில் உள்ளது.

wand:வருடுகோல்; உள்ளிடுகோல்; எழுத்தாணி: கணினியில் தகவல் உள்ளிட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பேனா வடிவிலான சாதனம். வரைகலைக்கான வரைபட்டிகை எழுத்தாணி அல்லது பட்டைக்குறி படிப்பிகள்போன்ற வருடுகருவி களை இவ்வகையில் சேர்க்கலாம்.

wanderer:வலைசுற்றி: வைய விரி வலையில் அடிக்கடி உலாவிவரும்