பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106◇ ராசீ



கிருஷ்ணரைப் பழிவாங்குவது என உறுதி கொண்டான். இவன் வானர இனத்தைச் சார்ந்தவன். "தேவர்க்கும் மனிதர்க்கும் அழிவு செய்வேன்" என்று தீர்மானித்துத் தொடர்ந்து தீமைகள்செய்தான். அஞ்ஞான வெறியால் வேள்விகளை அழிப்பதும், சாதுக்களை மிரட்டுவதும், விலங்குகளைக் கொல்வதும், ஊர்களைக் கொளுத்துவதும், மலைகளைக் கடலில் போடுவதும், கடலைக் கலக்குவதும், கரையில் உள்ள மீனவர்களை விரட்டுவதும், பயிர்களை அழிப்பதும் செய்துவந்தான். அதனால், உலகம் தன் கடமை களை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போயிற்று.

இவ்வாறு தொடர்ந்து அவன் நடந்து கொண்டி ருந்தான். பலராமன் ஒருநாள் ரைவதம் என்கிற பருவதத்தில் ரேவதி தேவியோடும் மேலும் சில தேவிமாரோடும் நந்தவனத்தில் மது அருந்திவிட்டு ஆட்டமும் பாட்டுமாய்க் களித்திருக்கும் வேளையில் அவனிடம் சென்று தன் குறும்புகளைக் காட்டினான். அவனை நோக்கிப் பல்லிளித்து எக்களித்தான்; அவன் தேவிமாரிடத்தும் நகைத்தும் குதித்தும் தொல்லைகள் தந்தான்; பலராமன் வைத்திருந்த ஆயுதங்கள் ஆகிய கலப்பையையும் உலக்கையையும் எடுத்துக் கொண்டு அவனை நையாண்டி செய்தான். அவர்கள் வைத்திருந்த பண்டம் பாத்திரங்களைக் கவிழ்த்தும் எறிந்தும் எரிச்சலை ஊட்டினான். பலராமன் அவனை வெருட்டிப்பார்த்தான். மிரட்டிப் பார்த்தான்; உலக்கையைக் கையில் எடுத்தபோது மலைக்கல்லை எடுத்து அவன்மீது வீசினான். அதை உலக்கையால் தடுத்து நொறுக்கித் தூள் ஆக்கினான். அந்த வானரன் உலக்கையை மீறி அவன் மார்பில் ஒரு அறை