பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110◇ ராசீ



அதனால்தான் கண்ணன் அவனை இருபிளவாக ஆக்குமாறு குறிப்புக் காட்டினான். தலைகீழாகப் போட்டு விட்டதால் அவன் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது.

சிசுபாலன் மறைவு

அடுத்த பகைவன் கண்ணனுக்குச் சிசுபாலனாக அமைந்தான். கண்ணனைப்போல அழகும் வசீகரமும் உடைய அவன் பிறக்கும்போது நான்கு கரங்களோடு பிறந்தான். கடவுள் பிறப்பு என்று யாரும் அவனை அதற்காக வணங்கிப் போற்றவில்லை. அவன் மிகைப் பட்ட கைகள் அவன் தகைமைக்கு ஏற்றவையாய் இல்லை. அவன் தாய்க்கு அதே கவலையாய் இருந்தது.

"யார் அவனை மடியில் வைத்துக் கொள்கிறார் களோ, அவன் மிகைப்பட்ட கைகள் அப்பொழுது மறைந்து விடுகின்றனவோ அவர் கையாலேயே அவனுக்கு மரணம் நேரிடும் என்று தெய்வவாக்குச் சொல்லி இருந்தது. அசரீரி கூறிய அந்தச் சொற்கள் அவன் தாய்க்குக் கேட்டன.

சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன்; அதனால், அவனைத் துக்கி எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான். அவன் அதிகமான கைகள் மறைந்து விட்டன. அவள் அன்னை அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்: கண்ணனால் அவனுக்கு மரணம் நேருமே என்பதை அவளால் நம்ப முடியவில்லை, எனினும், அவன் பிழைகள் நூறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டினாள்.