பக்கம்:கனிச்சாறு 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


வேலியர் யாம்தமிழ்ப் பைம்பயிர்க் கென்றே
விதந்துரைப்பார்;
கூலியென் னென்று கணக்கிடு வார்; ஒரு
கொள்குறையின்
காலியர் சிற்சில வோர்தமைக் கூட்டிக்
கலாம் விளைப்பார்;
போலியர்; செந்தமிழ்ப் பொய்ம்மையர் அன்னவர்
போக்கறிமே! 9

உணரின் செயலிலை, செய்யின் உரையிலை,
ஓர்க;உளம்
புணரின் தொடர்பிலை; தோன்றின் முடிவிலை;
போலிவினை
இணரின் பூத்த இலைபோல் கலித்தே
எழுந்தலைக்கும்
புணரி வியன்கரை போலதாம்; மெய்வினை
பூ;நடுவே! 10

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/100&oldid=1424696" இலிருந்து மீள்விக்கப்பட்டது