உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

வாழ்வே இலை வீழ்வே என
வருவாய் தமிழ் மகனே - உடன்
வருவாய் தமிழ் மகனே - தலை
மகனே! - வரும்
தாழ்வே தவிர் இனப்போர்புரி!
தமிழே பெறும் நலமே - செந்
தமிழே பெறும் நலமே - பெரு
நலமே! (தமிழ்த்)

-1975


87  தொண்டுக்குத் துணையாக வந்தவர்!


“துன்பம் இருக்கும்;
துணையிருக் காது
இன்பம் என்பதோ
என்றும் கனவுதான்!
அன்பென்ப தெல்லாம்
அளிக்கின்ற வரையில்!
தென்பெது தெரியுமா,
தேயாத தமிழ்தான்!
-என்ன சொல்கிறீர்?” என்றே, என்னொடும்
தொண்டு செய்திடத் துணிந்து முன் வந்த
அன்பர் ஒருவர்க்கு அமைதியாய்ச் சொன்னேன்;
“நன்றே வாழ்க, உம் தொண்டு” - எனவாழ்த்தி
நின்றுகொண்டி ருந்தவர் நீட்டினார்! நடையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/180&oldid=1424786" இலிருந்து மீள்விக்கப்பட்டது