பக்கம்:கனிச்சாறு 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


சீரழிப் பதுவே! இஃதைக்
கூர்ப்பான பார்வை கொண்ட
கொள்கையர் உணர்வார்! காட்டிக்
கொடுப்பவர் உணரார் என்க!

-1991


156

சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள்
சீராகிப் போகுமா?


இருந்து பார்த்தால்தான் தெரியும்!
லாவிடில் சிறைத்துன்பம்
எவ்வாறு புரியும்? (இருந்து)

மருந்துக் காகிலும் ஒருநாள், ஒரு பொழுது
மானத்திற் காயினும் ஒருமுறை, ஓர் இரவு
திருந்திடு வார்கள் எனும்நம்பிக் கையில்
திருடரை முரடரை வைக்கின்ற சிறையில் (இருந்து)

மூட்டைப் பூச்சியும் ஈக்களொடு கொசுவும்
முடைநாற்றச் சாய்க்கடை நீரும்,கழி வறையும்
வேட்டை யாடிடும் காவலரும் நிறைந்து
வீணர்கள் குவிந்திடும் சிறைக்குள், ஓர் இரவு (இருந்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/264&oldid=1437474" இலிருந்து மீள்விக்கப்பட்டது