பக்கம்:கனிச்சாறு 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


யாப்பால் பரவி இசைதந்த
யாழே! நீயே நினைமறந்தால்,
காப்பார் யாவர் கொழுந்தமிழைக்
கண்ணுள் மணிக்கே இணைவைத்தே. 13

பரப்பார் நிலமும் புகழ்பரப்பிப்
பரவா உளமும் கனல்பரப்பும்,
வரப்பார் நெறி நூல் பலசாற்றி,
வந்தாய்! தமிழா, உனைவிளிப்பேன்;
வரப்பார் நெறி நூல் பலசாற்றி,
வந்தாய்! நீயே நினைமறந்தால்,
புரப்பார் யாரிங் கொளிதமிழை;
பொருள், மெய், ஆவிக் கிணைவைத்தே? 14

பணையார் தோளும், உணர்நெஞ்சும்
பணிசெய் முனைப்பும் விறல்வேந்தும்,
புணையாய் இருந்தே தமிழ்புரந்த
புலியே! ஒருசொல் உனைவிளிப்பேன்;
புணையாய் இருந்தே தமிழ்புரந்த
புலியே, நீயே நினைமறந்தால்,
துணையார் இனியே தீந்தமிழ்க்கே;
தொலையா வாழ்விற் கிணைவைத்தே? 15

-1963
)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/84&oldid=1424737" இலிருந்து மீள்விக்கப்பட்டது