பக்கம்:கன்னி விதவையான கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


தமிழக இலக்கியகாலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.

வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனித குல வளர்ச்சிக்குப் பயன்படாத இதிகாச - புராணக் கதைகளையே படித்துச் சலித்துப்போன தமிழர்களை இருண்ட இலக்கிய உலகிலிருந்து கரையேற்றி, புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அந்தப் புதிய தாரகைக்கே உண்டு.

சுடர்விட்டு மின்னிய அந்தத் தாரகைதான் டாக்டர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.

பாண்டவர் வனவாசம், இராமர் பட்டாபிஷேகம், சந்திரமதி புலம்பல், அர்ச்சுனன் தபசு, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளித் திருமணம் போன்ற மூட நம்பிக்கையை வளர்க்கும் கதைகளுக்கும் நாடகங்களுக்கும் முடிவுகட்ட முத்தான கதைகளையும், நாடகங்களையும் சமுதாயத்துக்கு வழங்கி, மக்களின் மனதில் வேரோடிப் போயிருந்த அறியாமையைக் களைந்தெறிந்த பேராளர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.