உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

11


டும் பரந்தாமன், அழகாபுரி முதலாளி மாரியப்பபிள்ளைக்கு வாழ்க்கைப்பட இருக்கும் சாரதாவை அடைய முடியுமா!

அழகாபுரி வந்து சேர்ந்த அழகிக்கு, பரந்தாமன் நினைப்பு தான்! பரந்தாமனின் வாட்டம் சாரதாவுக்கு வராமற் போகவில்லை. சாரதாவின் கவலை பரந்தாமனைவிட அதிகம். பரந்தாமனுக்கேனும் சாரதா கிடைக்கவில்லையே இன்பம் வராதே – என்ற கவலை மட்டுமேயுண்டு, சாரதாவுக்கு இரு கவலை. பரந்தாமனைப் பெறமுடியாதே – இன்ப வாழ்வு இல்லையே என்பது ஒன்று. மற்றொன்று மாரியப்பபிள்ளையை மணக்க வேண்டுமே துன்பத்துக்கு அடிமைப்பட வேண்டுமேயென்பது. எனவே, சாரதாவின் ‘சோகம்’ குறையவில்லை அதிகரித்தது.

மாரியப்பபிள்ளைக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. ஆச்சு! ஆவணி பிறக்கப்போகிறது! இந்தப் பெண் ‘சோகம்’, ‘சோகம்’ என்று படுத்தபடி இருக்கிறாள். “இவள் சோகம் எப்போது போவது? என் மோகம் எப்போ தணிவது” என்று கோபித்துக்கொண்டார்.

“அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று பார்த்தால் இப்படி ‘சீக்’ பேர்வழியாக இருக்கிறாள். உடல்கட்டை மட்டும் கவனித்தால், உருட்டி எடுத்த கிழங்குகள்போல் இருக்கின்றன” என்று கவலைப்பட்டார். சாரதாவுக்கு வைத்தியத்தின்மேல் வைத்தியம். ஒரு மந்திரவாதி உபயோகமில்லை என்று தெரிந்ததும், மற்றொரு மந்திரவாதி என்று சிகிச்சை நடந்து வந்தது. ஆனால் அவளுடைய மனநோய் மாறினால்தானே சுகப்படும்.

வீராசாமிபிள்ளைக்கு விசாரம்! வேதவல்லிக்கு விஷயம் வெளியே சொல்ல முடியாது. ஒருநாள் மெதுவாக சாரதாவிடம் மாரியப்பபிள்ளையை மணந்துகொண்டால் படிப்படியாக நோய் குறைந்துவிடும் என்று கூறி