பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

23


தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு. கண்டுகொண்டான் பரந்தாமன். குனிந்து அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான்.

“ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா” என்று கர்ஜித்தார் மாரியப்பபிள்ளை வாயிற்படியில் நின்றுகொண்டு.

“மடையா!“ என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான சாரதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும் பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும் அவள் நினைவிற்கு வந்தது. அவனோ, சாரதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! “மடையா!” என்று கர்ஜித்துக்கொண்டே மாரியப்பபிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன. மாரியப்பபிள்ளையின் பிடியினால் பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எச்சரித்தார். மாரியப்பபிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுத்த மரம்போல, சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன், குபீரென மண்டையிலிருந்து இரத்தம் பெருகிற்று. “ஐயோ!” என்று ஈனக்குரலில் அலறினாள் சாரதா! “என்ன! என்ன!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும் அவள் புருஷனும் கருப்பையாவும் வந்தனர்.

பரந்தாமன் இரத்தம் ஒழுக நிற்பதையும் சாரதா, கண்ணீர் பெருக நடுங்குவதையும் கோபத்தின் உருவமென மாரியப்பபிள்ளை உருமிக்கொண்டிருப்பதையும் கண்ட-