பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

53


“ஓ! கோகிலா, வாயேன் உள்ளே” என்று கூறினான். கோகிலம் வருவதைப் போல பாசாங்கு செய்துகொண்டே.

முரட்டுக் கருப்பையா சரெலெனத் திரும்பினான். கதவுப்பக்கம். வேலன் புலிபோல அவன்மீது பாய்ந்து மடியில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டான்.

சட்டை கிழிந்துவிட்டது. கருப்பையாவுக்கு. தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டதை எண்ணினான்.

வேலன் இளித்தான். “கருப்பையா நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை. இப்படி உட்கார்” என்று கட்டளையிட்டான்.

பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா மிகப் பரிதாபத்துடன், “ஐயா என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம் அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்யவேண்டாம்” என்று கெஞ்சினான்.

“கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது. தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா, இன்றுந்தான் என்ன, ஈட்டிமுனைக்கு எதிரில்கூட நான் அவசரப்படவில்லை” என்றான் வேலன்.

“அந்தப் போட்டோ, அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. உன் பிள்ளை குட்டிகளுக்கும் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே” என்று கருப்பையா வேண்டினான். “உளராதே கருப்பையா குடும்பத்தை நானா கெடுத்தேன்” என்று கோபித்தான் வேலன்.

கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், “சரி சரி சர்வமங்களம் உண்டாகட்டும். எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளை காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய்