பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

55


வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, ராதா - கருப்பையா மர்மக்காதலைப் பற்றிக் கண்டுகொண்டதாக, ராதாவின் புருடனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“கண்ணே ராதா, போய் வரட்டுமா, ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு, பெண் பிறந்தா, கவனமிருக்குமா” என்று கொஞ்சினாள் கோகிலம் ராதாவிடம்.

ராதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும் பாவம்!

கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் மாதா மாதாம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.

கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக் கணக்கை எப்படி மாற்றுவது எப்படிச் சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.

வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துகளைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடிக் கருப்பையாவிடம் தந்து வந்தாள் சாரதா.

செக்கு இழுத்து இழுத்து மாடு கெட, எண்ணெயைத் தடவித் தடவிப் பிறர் மினுக்குவதைப் போல சாரதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்ப அதனை வைத்துக்கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.

“இப்படியும் எனக்குத் தொல்லை வருமா, நீ செய்த வேலைதானே. பாவி உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன். அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம், எங்கே கழுத்துக் கண்டி என்று கேட்க ஆரம்பித்தால், நான்