பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 577 இத்தகைய உணவு உண்டு களிக்கும் கலகலப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமல்லாமல் நாடெங்கும் நிறைந்திருந்தது என்று கம்பன் குறிப்பிடுவது சிறப்பாகும். குடிமக்களின் வாழ்வு சிறந்து கோன் நிகர் குடிகளாக மக்கள் வாழ்ந்தனர். பல தொழில்களும் தழைத்து ஓங்கியிருந்தன. கலைகள் பலவும் பரவிப் படர்ந்திருந்தன. வாழ்க்கைத் தேவைகள் என்பது வெறும் உணவும் உடையும் நல்ல குடியிருப்புகள் மட்டுமல்ல. அத்துடன் சேர்ந்து கல்வியும், கல்வி அறிவும், ஒழுக்கமும் சிறந்த பொழுது போக்குகளும், ஆடல்களும், பாடல்களும், கவிதையும், மகிழ்ச்சியும், நற்பண்புகளும் நல்லொழுக்கங்களும் ஆன்மீக நெறிகளும் தேவைகளும் சேர்ந்த ஒன்றிணைந்த சமுதாயம் தான் சிறந்த சமுதாயமாகும் என்று நமது முன்னோர்கள் கண்டிருந்த சமுதாயக் கருத்துக்களை வாழையடி வாழையாக அவ்வழியில் அச்சிறந்த மரபில் வந்த கம்பனும் தெளிவுப் படுத்திச் சிறப்பாக எடுத்துக் கூறியிருப்பது நமக்கு மிகுந்த பெருமையளிப்பதாக உள்ளது. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் வெண்பாவிற்கோர் புகழேந்தி தனது நளவெண்பா என்னும் நன்னூலில் நிடத நாட்டைப் பற்றிக் கூறும் போது இல்லாமையும் கல்லாமையும் இல்லாத நாடு என்று குறிப்பிடுகிறார். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று மனித சமத்துவ நிலையைச் சங்க காலச் சான்றோர் எடுத்துக் கூறியுள்ளது நமது பாரத நாட்டின் சீரிய பண்பாட்டுப் பாரம்பரியமாகும். ■ “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை” என்று வள்ளுவப் பேராசான் கூறியிருப்பது நமது பாரம்பரி சிந்தனையின் சிகரமாகும். அந்த வழியில், கம்ப நாடர் உச்சத்திற்குச் சென்று “எல்லோரும் எல்லாப்பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ’ என்று கூறியிருப்பது காலத்தை வென்ற, எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய, நெடிது நோக்கிய மிக உயர்ந்த சிந்தனையாக அமைந்துள்ளது என்பதைக் காண்கிறோம்.