பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшәйі – суд» «Qрғылшй шптіъюви_osto+ cosofkалғай7 482 பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொரு பெருந்துயில், நெடுங்காலம் உழைத்து விடுவது ஆயினை பின் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான்.” என்பது கம்பனுடைய கவிதையாகும். இராமனுடைய வார்த்தைகளுக்குக் கும்பகருணன் தனது நிலையிலிருந்து சரியான அரசியல் மறு மொழியைக் கூறுகிறான் என்றே சொல்லலாம். பெருமையும், மானமும், வீரத்தின் வழியில் வழுவாத அரசியல் நீதியும் குல தருமமாகக் கொண்டவர்கள் நீங்கள். நீ மூவுலகையும் ஆள்பவனாக இருந்தாலும் பழி எது, பாவம் எது என்பதைத் தெளிவாக உணர்ந்த ஒரு அரசன் அல்லவா? அந்தக் கடமையை நீ மறந்து விடக் கூடாது. நீ சரியான கருத்தைக் கூறவில்லை. நானும் எனது தங்கையைப் போல செவிகளையும் மூக்கையும் இழந்து என் முகத்தை வெளியில் காட்டி வாழ மாட்டேன்” என்று கும்பகருணன் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “மற்றெலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத கொற்ற நீதியும் குல முதல் தருமமும் என்று இவை குடியாகப் பெற்ற நுங்களால் எங்களைப் பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் அற்ற எங்கை போல் என்முகம் காட்டி நின்று ஆற்ற லேன் உயிர் ” என்றும், “ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி யோரும் கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன் ஒராய்