பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. பபபறுபய அரசியலும் 5()| கலங்கினான். அரக்கனின் மாயச் செய்கையைப் பற்றி வீடணன் விளக்கமாகக் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “ அவ்வுரை அருளக் கேட்டாங்கு அழுகின்ற அரக்கன் நம்பி இவ்வழி அவன்வந்து எற்பது அறிந்திலம் எதிர்ந்த போதும், வெவ்வழி அவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் தெய்வவன் பாசம் செய்த செயல் இந்த மாயச்செய்கை ” எனவே இதில் யாரும் இறக்கவில்லை. நாகபாசத்தால் மயக்கிடைத்துள்ளனர். எனவே கலக்கமடைய வேண்டாம். மயக்கத்தைப் போக்க வழி காண்போம், என்று வீடணன் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். அப்போது கலுழன் புறப்பட்டு வந்து நாகபாசத்தை நீக்கினான். கலுழன் என்பது பறவை இனத்தலைவன் கருடன். நாகத்தின் எதிரி. அந்தக் கருடன் வந்து நாகபாசத்தை நீக்கியவுடன், இலக்குவனும் வானர வீரர்களும் மீண்டும் உணர்வு பெற்று எழுந்தனர். கருடன் துணையால் இலக்குவனும் வானரர்களும் உயிர் மீண்டனர் என்பதை அறிந்த இராவணன் கோபமடைந்து மீண்டும் இந்திர சித்தனைப் போருக்கு அனுப்பினான். இந்திர சித்தனும் மீண்டும் போருக்குப் புறப்படச் சம்மதித்தான். ஒரு நாள் ஒய்வெடுத்து களைப்பு நீக்கி, மறுநாள் போர்க்களத்திற்குச் சென்று நான்முகன் படையை ஏவி உன் துயர் தீர்ப்பேன் என்று கூறி இந்திர சித்தன் மறுநாள் மேலும் பெரிய படையுடன் போருக்குப் புறப்படத் தயாரானான். இடையில் படைத்தலைவர்கள், கரன் மகன் மகரக் கண்ணன் முதலானோர் கடும்போர் செய்து மாண்டனர். இந்திரசித்தன் மறுநாள் முழு தயாரிப்புடன் போர்க்களத்திற்கு வந்தான். போர் கடுமையாக நடந்தது. இருதரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.