பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. eunugolin efféllugpun 507 சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனை யைச் சிதைக்க மறந்துநிற்குமோ மற்றவன்திறன், என் றான் மதலை’ என்று இந்திரசித்தன் சிறுபிள்ளைத் தனமாகக் கூறினான் என்பதை என்றான் மதலை எனக் குறிப்பிட்டுக் கம்பன் கூறுகிறார். அவ்வமயம் இராமன் போர்க் களத்திற்கு வந்தான் போர்க்களத்தில் இலக்குவனும் மற்றவர்களும் இறந்து கிடப்பதைக் கண்டான். அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டு இராமன் கடுந்துயரம் அடைந்து புலம்புகிறான், கலங்குகிறான் கம்பன் இராமனுடைய துயிர்க்காட்சியைப் பற்றி விரிவாக உருக்கமாகக் குறிப்பிடுகிறார். இராமனே கலங்குவது என்பது அனைவரையும் கலங்க வைக்கும் காட்சியாகும். இராமன் சுக்கிரீவன் உடலைப் பார்த்துப் புலம்புகிறான். மாருதி கிடந்த காட்சியைக் கண்டு கலங்குகிறான். “முன்னைத் தேவர்தம் வரங்களும் முனிவர் தம்மொழியும் பின்னைச் சானகி உதவியும் பிழைத்தன, பிரிது என்? புன்மைச் செய் தொழில் என்வினைக் கொடுமையால் புகழோய் என்னைப்போல்பவர் ஆர் உளர் ஒருவர்? என்று இசைத்தான்”

  • புன்தொழில் புலை அரசினை வெஃகி

னேன், பூண்டேன், கொன்று ஒருக்கினேன் எந்தையைச் சடாயுவைக் குறைத்தேன் இன்று ஒருக்கினேன் இத்தனை வீரரை இருந்தேன் வன்தொழிற்கு ஒரு வரம்பு உண்டாய் வர அற்றோ? ”