பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 509 பாங்கர் ஆயினோர்யாவரும் பட்டனர், பட்ட தீங்குதான் இது, தமியனையார் துயர் தீர்ப்பார்?" இவ்வாறு உலகுக்கெல்லாம் ஏற்படும் துன்பதுயரங்களைத் தீர்க்கும் அவதாரம் கொண்ட இராமனுக்கு ஏற்பட்ட துயரத்தை யார் தீர்ப்பர் எனத் தேவர்களும் கலங்கினர். " மண்மேல் வைத்த காதலின், மாதர் முதலோர்க்கும், புண்மேல் வைத்த தீநிகர் துன்பம்புகுவித்தேன் பெண்மேல் வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன் எண் மேல்வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ?” என்று இராமன் கலங்குவதைக் கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு நடந்துள்ள நிகழ்ச்சிகளையெல்லாம் போர்க்கால அரசியல் சூழ்நிலையில் நாம் காணவேண்டும். இந்திரசித்தன் நடத்திய போர் மிகவும் கடுமையானது. போர் நெறிகளுக்குட்பட்டதல்ல. சாகசமானது. மாயமானது. வஞ்சகமானது. அவன் நாக பாணத்தைத் தொடுத்த போதும், பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தபோதும், அவைகளை நேருக்கு நேர் நின்று போர் செய்யும் போது தொடுக்கவில்லை. மாயமாகப் போய் மறைந்து நின்று வஞ்சகமான முறையில் அந்தச் சக்தி ஆயுதங்களைப் பயன்படுத்தினான். இராமனும் இலக்குவனும் சேர்ந்து போர் நடத்தியபோது இருவரில் ஒருவர் யார் வருகிறார்கள் என்று கேட்ட இந்திரசித்தன், இலக்குவனைக் கொல்லச் சக்தி ஆயுதங்களை வஞ்சகமான முறையில் மாயமாக நின்று பிரயோகம் செய்தான். நாகபாணத்தால்,பாதிக்கப்பட்டஇலக்குவனையும், வானரப்படையையும் அவர்கள் மீது படிந்திருந்த விடத்தை நீக்கிக் கலுழன் காப்பாற்றினான். அடுத்து இலக்குவன் நான்முகள் படைக்கலத்தைத் தொடுக்கக் கருதியபோது இராமன் பெரும் அழிவை உண்டாக்கவிருக்கும் பெருநாசத்தை விளைவிக்கும் ஒரு சக்தி ஆயுதத்தை நாம் பிரயோகிக்கக் கூடாது என்னும் யுத்த தர்மத்தை இராமன் எடுத்துக் கூறுகிறான்.