பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 527 தனது முயற்சிகள் வெற்றி பெறாமைக்கு வீடணன்தான் காரணம் என்று கருதி இந்திர சித்தன் அவன் மீது கோபம் கொண்டு அவனை இகழ்ந்து பேசினான். இருவருக்கும் இடையில் ஒரு கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த வாதத்தின் முடிவில் இருவருக்கு மிடையில் கடும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் இந்திரசித்தன் தனது கையில் இருந்த சக்திமிக்க ஆயுதங்களை, வலுவான கணைகளை வீடணன் மீது ஏவினான். அந்த ஆயுதங்கள், கணைகளையெல்லாம் இலக்குவன் தடுத்து விட்டான். பின்னர் வீடணனும் கோபம் கொண்டு தனது சக்தி மிக்க கைத்தடியினால் இந்திரசித்தனது தேரையும் தேர்ப்பாகனையும், குதிரைகளையும் அழித்தான். இந்திரசித்தன் மறைந்து சென்று இலங்கைக்கு ஒடிவிட்டான். இது ஒரு அற்புதமான காட்சியாகும். இதைக் கம்பன் மிக அழகாகத் தனது கவிதைகளில் வடித்துத் தருகிறார். இந்திரசித்தன் வீடணன் மீது ஏவிய வசைக்கள்ைகள், அவைகளுக்கு வீடணன் அளித்த பதில், சிறந்த அறக் கருத்துக்கள் கொண்டவைகளாகும். அவைகளுக்கு பதிலளிக்க முடியாமல் இந்திர சித்தன் வீடணன் மீது கொடுங்கனைகளை வீசுகிறான். இலக்குவன் அவையனைத்தையும் தடுத்துவிட்டான். அந்தக் காட்சியைக் காணலாம். இந்திர சித்தன் கூறுகிறான். “முரண்தடம் தண்டும் ஏந்தி, மனிதரை முறைமை குன்றப் புரட்டரின் புகழ்ந்து பேதை அடியனின் தொழுது பின்சென்று இரண்டுறு முரசம் என்ன, இசைத்ததே இசைக் கின்றாயைப் புரட்டுவேன் தலையை இன்று பழியொடும் ஒழி வேன் போல் ஆம்” “நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதல் எல்லாம் வேர் உளதனையும் வீவர் இராவணனோடு மீளார் ஊர்உளது, ஒருவன் நின்றாய்நீ உளை உறைய நின்னோடு ஆர்உளார் அரக்கர் நிற்பார்? அரசுவீற்றிருக்க ஐயா?