பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 537 போத லும்புரிவர், செய்த தீமையும் பொறுப் பர் உன்மேல் காதலால் உரைத்தேன் என்றான் உல கெலாம் கலக்கி வென்றான்” இந்திரசித்தனை உலகெலாம் கலக்கி வென்றவன் என்று கம்பன் குறிப்பிடுகிறார். சீதையை விட்டு விடும்படி பலரும் சொன்னார்கள். கடைசியில் இப்போது இந்திரசித்தனும் அதைக் கூறி விட்டான். நான் பயந்து விட்டேன் என்று கருத வேண்டாம். சீதையின் மேலுள்ள ஆசையை நீ விடுவாயாகில் அவர்களுடைய சீற்றம் தீரும். திரும்பிப் போய் விடுவார்கள். நீங்கள் செய்த தீமைகளையும் பொறுப்பர். உன்மீதுள்ள அன்பினால் இதைக் கூறினேன்” என்று இந்திரசித்தன் கடைசிக் கட்டத்தில் தனது அனுபவத்தில் கிடைத்த படிப்பினையை மனதில் கொண்டு அடக்கமாகத் தனது கருத்தைத் தனது தந்தையிடம் தெரிவித்தான். இந்தக் காட்சி இராவணனுடைய அரசியலில் அவனுடைய ஆட்சியில் அவனது போர்க் களச் சூழ்ச்சியில் தனியாண்மை பெயராத கம்பீரத்தின் உச்ச கட்டமாகும். இறுதி கட்டமுமாகும். இந்திரசித்தனுடைய போர்த்திறன் இந்தப் போரில் ஒரு தீர்மானமான சக்தியாகும். இந்திரசித்தன் தனது இயல்பினால் பண்பட்ட பக்குவத்தால் சீதையைக் கைவிடுமாறு கூறவில்லை. தனது சொந்த அனுபவத்தில் பட்டறிவு பெற்று இராவணனுக்கும் இறுதிக்காலம் வந்து விட்டது என்று கவலை கொண்டு அந்தக் கருத்தினைக் இந்திரசித்தன் கூறியதைக் கேட்டு இராவணன் நகைத்தான். “உனக்குப் போர் செய்வதில் தயக்கம் ஏற்பட்டு விட்டது. மயக்கம் ஏற்பட்டு விட்டது. இனி நீ போருக்குப் போக வேண்டாம். நானே சென்று அந்த மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி மேலும் சொல்கிறான். “முன்னை யோர் இறந்தோர் எல்லாம் இப் பகை முடிப்பர் என்றும், பின்னை யோர் நின்றோர் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும்