பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшвит — «РФ «Qдалшu шптегови TamilBOT (பேச்சு)}, costofkитчейі 544 நல்ல பெருமை மிக்க குலத்தில் பிறந்த நீ செய்யக் கூடாது. அதனால் மீளாத பழி வந்து சேரும். இவ்வாறான பொது நெறி மற்றும் அரசியல் நெறிகளை எடுத்துக் கூறியும் அத்துடன் குலப் பெருமையையும் எடுத்துக் கூறியும் தகாதன செய்தல் நன்று அன்று என்றும் முதலமைச்சன் மகோதரன் அறிவுறுத்துகிறான். கடைசியில் இராவணனுடைய உள்ளத்தில் உள்ள ஆசைகளையும் கிளரி விட்டு நீ போருக்குப் போய் இராமனை வென்று வெற்றியுடன் இலங்கை நகருக்குத் திரும்பி வரும் போது சீதை இங்கு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்றும் எடுத்துக் கூறுகிறான். அதைக்கம்பன் மிகவும் நயமாகத் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். “இன்று நீ இவளை வாளால் எறிந்து போய் இராமன் தன்னை வென்று மீண்டு இலங்கை மூதுர் எய்தினை வெதும் புவாயோ? பொன்றினன் சீதை, என்றே போவார்கள் அவர்தாம் அல்லால் வென்றிட முடியாது என்னும் வீரமோ விளம் பல் என்றான்.” எனவே உனக்கு அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்னும் எண்ணம் வந்து விட்டதா? அது வீரம் தானா? என்று தன்மானத்தையும் குத்தி விட்டுச் சீதையைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிடக் கோரினான் முதலமைச்சன் மகோதரன். “என்னலும் எடுத்த கூர்வாள் இரு நிலத்து இட்டு மீண்டு மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலர் வலிதின் கொண்ட சின்னமும் அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன் தொல் நெறித் தைலத்தோணி வளர்த்துமின்? என்னச் சொன்னான்” இவ்வாறு இராவணன் சீதை மீதான கோபம் தணிந்துப் போருக்குத் தயாரானான்.